
சொதப்பிய பேட்டிங் ஆர்டர்
மும்பையின் வான்கடே மைதானத்தில் நியூசிலாந்துக்கும் இந்தியாவுக்கும் எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது . டாஸ் வென்ற விராட் கோஹ்லி தலைமையிலான அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் தொடக்கமே இந்திய அணிக்கு சரியாக அமையவில்லை. நீண்ட நாட்கள் பின்பு ஒன்றாக களம் இறங்கிய தவான் , ரோஹித் ஜோடி சரியாக கை கொடுக்கவில்லை. 2 சிக்ஸர்களுடன் அதிரடியாக இறங்கிய ரோஹித் 20 ரன்னில் 'போல்ட்' ஓவரில் விக்கெட் ஆனார். அதே போல் தவானும் 9 ரன்களுக்கு 'போல்ட்' ஓவரில் விக்கெட்டை இழந்தார். கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், டோணி, பாண்டியா என அடுத்தடுத்து களமிறங்கிய அனைவரும் அவுட் ஆனார்கள்.

பொறுப்பாக விளையாடிய கோஹ்லி
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி மட்டும் ஆட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து விளையாடினார். இது கோஹ்லி விளையாடும் 200 வது ஒருநாள் போட்டியாகும். இதில் 125 பந்துகளை சந்தித்த கோஹ்லி 121 ரன்கள் அடித்தார். இதன்முலம் பாண்டிங்கின் சாதனையை முறியடித்து அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்து இரண்டாம் இடம் பிடித்தார். இதன் காரணமாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 280 ரன்களை 8 விக்கெட் இழப்பிற்கு எடுத்தது. கோஹ்லிக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் அதிகமாக 37 ரன்கள் எடுத்தார்.

ஒர்க் அவட் ஆகாத பவுலிங்
இந்த நிலையில் நியூசிலாந்து அணி 281 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடத் தொடங்கியது. ஓப்பனிங் பேட்ஸ் மேன் குப்தில் , பாண்டியா ஓவரில் 32 ரன்களுக்கு அவுட் ஆனார். கோலின் , பும்ரா ஓவரில் 28 ரன்களுக்கு அவுட் ஆனார். கேப்டன் கேன் வில்லியம்சன் 6 ரன்கள் எடுத்து குல்தீப் ஓவரில் அவுட் ஆனார். இதுவரை சிறப்பாக இருந்த இந்திய பவுலிங் பின்பு சொதப்ப தொடங்கியது. அடுத்து வந்த பார்ட்னர்ஷிப்பை கலைக்க முடியாமல் அனைத்து பவுலர்களும் திணரத்தொடங்கினர்.

எளிதான வென்ற நியூசிலாந்து அணி
டெய்லரும், டாம் லாதமும் அமைத்த கூட்டணியை முறிக்க முடியாமல் இந்திய பவுலிங் வரிசை திணறியது. இந்த நிலையில் டாம் லாதாம் சதத்தைக் கடந்தார். அவருக்கு அடுத்தபடியாக டெய்லரும் 95 ரன்களை கடந்து சாதனை படைத்தார். மிகவும் வலுவாக இருந்த இந்த கூட்டணி 48 ஓவரில் மிக எளிதாக 280 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. இருப்பினும் 1 ரன் எடுக்க வேண்டிய நிலையில் 48.5வது ஓவரில் டெய்லர் அவுட் ஆனார். பின்னர் நிக்கோலஸ் களமிறங்கினார். அவர் 48.6-வது ஓவரில் பவுண்டரி விளாச நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. நியூசிலாந்து அணி 49.0 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மூன்று ஒருநாள் போட்டி கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வைக்கிறது.


Click it and Unblock the Notifications











