Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா செம்ம வெற்றி.. தொடரை சமன் செய்து கெத்து!

புனே: புனேவில் இன்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில இந்தியா அபார வெற்றி பெற்றது. மிக முக்கியமான இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக விளையாடினர். இதையடுத்து இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி திணறியது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் 230 இழப்புக்கு ரன்கள் எடுத்திருந்தது.

231 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 46 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு எளிதாக வெற்றிபெற்றது. இதன்முலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என இந்திய அணி சமன் செய்துள்ளது.

சொதப்பிய நியூசிலாந்து அணி

சொதப்பிய நியூசிலாந்து அணி

புனேயில் நடந்த இந்தப் போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது . போட்டி ஆரம்பித்ததில் இருந்து நியூசிலாந்து அணி மிகவும் திணறியது. பால் அதிகமாக பவுன்ஸ் ஆனதால் நியூசிலாந்த் வீரர்கள் சரியாக ஆட முடியாமல் திணறினர். களத்திற்கு வந்த வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் எந்த பார்ட்னர் ஷிப்பும் நிலையாக அமையவில்லை. மேலும் சென்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோஸ் டெய்லரும், லாதமும் கூட சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இந்தியாவுக்கு டார்கெட்

இந்தியாவுக்கு டார்கெட்

இந்த நிலையில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் 42 ரன்களும், கோலின் 41 ரன்களும் எடுத்தனர். புவனேஸ்வர் குமார் மூன்று விக்கெட்டுகளும், சாஹல், பும்ரா தலா இரண்டு விக்கெட்டும், அக்சர், பாண்டியா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். வேகப்பந்துக்கு ஏற்ற பிட்சாக இருந்தாலும் இந்திய ஸ்பின் பவுலர்களும் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடினர்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

231 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி மிகவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது . இறங்கிய கொஞ்ச நேரத்திலேயே ரோஹித் சர்மா 7 ரன்கள் எடுத்து 'சவுதி' பவுலிங்கில் 'முன்ரோ'விடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஒருபக்கத்தில் விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்தாலும் ரன்னும் கூடிக்கொண்டே சென்றது. தவான் அதிரடியாக ஆடி 68 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு சிக்ஸ்கள் அடக்கம்.

இந்திய அணி வெற்றி

இந்திய அணி வெற்றி

இந்த நிலையில் 231 ரன்கள் என்ற எளிதான ஸ்கொரை நோக்கி விளையாடிய இந்திய அணி 46 வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு மிக எளிதாக வென்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக தவான் 68 ரன்களும், தினேஷ் கார்த்திக் 60 ரன்களும் எடுத்தனர். இதன்முலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என இந்திய அணி சமன் செய்துள்ளது.

Story first published: Wednesday, October 25, 2017, 22:19 [IST]
Other articles published on Oct 25, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+