போட்டியின் போது மைதானத்தில் அதை பண்ணிய கேப்டன்…!! உண்மையில் வித்தியாசமானவர் தான்…! வைரல் வீடியோ
கொழும்பு: இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ரசிகர்களுடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
உலக கோப்பை தொடருக்கு பின்னர் நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பெருகினர். அதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது.

உலக கோப்பை பைனலில் இங்கிலாந்திடம் நியூசிலாந்து தோல்வியடைந்தது. ஆனாலும் முகத்தில் பதட்டமோ, கோபமோ இன்றி அணியை சிறப்பாக வழி நடத்தினார். இது அப்போது பரவலாக பேசப்பட்டது.
அந்த பைனலில், நியூசிலாந்து அணி தோல்வியடைந்த பிறகு பவுண்டரி தொடர்பான விதியை பலரும் விமர்சித்தனர். ஆனால் வில்லியம்சன், இரு அணிகளுமே நன்றாக விளையாடியது. ஆனால், கோப்பை ஒரு அணியிடம் இருக்கிறது, அவ்வளதுதான் என்றார்.
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது ரசிகர்களுடன் தனது 29வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். ஆட்டத்தின் நடுவே களத்தில் இருந்து நேராக ரசிர்களை நோக்கி வந்தார். பர்த்டே கேக்கை வெட்டி கொண்டாடிய அவர், ரசிகர்கள் ஊட்டிய கேக்கையும் சாப்பிட்டார்.
ரசிகர்களின் அன்பையும், அவர்களது எண்ணத்தையும் மதித்து போட்டியின் நடுவே தமது பிறந்த நாளை கொண்டாடிய வில்லியம்சனின் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அவரது இந்த செயலுக்கு ரசிகர்கள் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications