நியூசிலாந்து அணியுடன் முதல் ஒருநாள் போட்டி - ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சை சமாளிக்குமா இந்தியா ?
மும்பை: இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.
நியூசிலாந்திடம் வெற்றி பெற இந்திய அணி கடுமையாக பயிற்சி மேற்கொண்டிருக்கிறது. இருந்தாலும், பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சை சமாளிக்குமா என்கிற கேள்வி கிரிக்கெட் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.
சமீபகாலமாக இந்திய அணிக்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் பயம் காட்டி வருகிறார்கள். அவர்களின் பந்துவீச்சை சமாளிக்க இந்திய அணியின் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் திணறி வருகிறார்கள். அதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம்.

ஆமிரும், பெஹண்ட்ராப்பும்
கடந்த ஜூன் மாதம் நடந்த சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானின் முகமது ஆமிர் இந்திய அணியின் டாப் ஆர்டரை துவம்சம் செய்தார்.
அதுபோல, நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பெஹண்ட்ராப் தொடர்ந்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார். ஸ்டார்க், முஸ்டாபிகுர் ரஹ்மான் என இந்தப் பட்டியல் நீள்கிறது.

ட்ரெண்ட் போல்ட் புயல்
இடது கை வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க இந்தியா தொடர்ந்து திணறி வருகிறது. இன்றைய போட்டியில் நியூசிலாந்தின் ட்ரெண் போல்ட் இருக்கிறார். அதனால், இன்றைய போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

டாப் ஆர்டர் இலக்கு
இதுவரை 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் போல்ட், இந்தியாவிற்கு எதிராக 2016ல் மட்டும் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 விக்கெட் எடுத்து இருக்கிறார். 90 விக்கெட்டுகள் எடுத்து இருக்கும் இவரது முக்கிய குறியே எதிரணியின் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான்.

நியூசிலாந்தின் பயிற்சி ஆட்டம்
மூன்று நாட்களுக்கு முன் மும்பை போர்டு அணியுடன் விளையாடிய போது இவர் காட்டிய அதிரடி, இந்திய அணியை கொஞ்சம் மிரட்டித்தான் இருக்கிறது. இதுவரை வான்கடே மைதானத்தில் நியூசிலாந்து அணி உலகக்கோப்பை சமயத்தில் இரண்டு ஆட்டங்கள் தான் ஆடி இருக்கிறது. இன்று தான் இந்தியாவோடு இந்த மைதானத்தில் களம் இறங்குகிறது.


Click it and Unblock the Notifications