போங்கய்யா நீங்களும் உங்க பீல்டிங்கும்.. ஒரே பால்ல ஓடியே 5 ரன் எடுத்துட்டாங்க!!
துபாய் : பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையே சமீபத்தில் நடந்து முடிந்த மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி பீல்டிங்கில் மோசமாக சொதப்பியது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகள் தொடரில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின.
முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சம நிலையில் இருந்தன.
எதிர்பார்ப்பு நிலவியது
2011க்கு பின் பாகிஸ்தான், நியூசிலாந்தை ஒருநாள் தொடரில் வீழ்த்தியதில்லை. எனவே, கடைசி போட்டியில் யார் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், அந்த போட்டியில் மோசமான பீல்டிங் செய்தது நியூசிலாந்து.

3 ரன்கள் எடுத்தனர்
நியூசிலாந்து அடித்த 280 ரன்களை சேஸ் செய்தது பாகிஸ்தான். அப்போது ட்ரென்ட் பெளல்ட் வீசிய பந்தை பாஹீம் அஷ்ரப் அடித்தார். அப்போது ஆசிப் அலி மற்றும் அஷ்ரப் 3 ரன்கள் ஓடி முடித்தனர். பீல்டிங் செய்த வீரர் பந்தை விக்கெட் கீப்பர் நிற்கும் பகுதியை நோக்கி வீசினார்.

பீல்டிங் சொதப்பல்
விக்கெட் கீப்பர் பகுதியில் நின்று இருந்த டாம் லாதம் அந்த பந்தை பிடித்து, பந்துவீச்சாளர் பக்கத்தை நோக்கி எறிந்தார். அது ஓவர் த்ரோ ஆகியது. அதை பயன்படுத்தி கூடுதலாக ஒரு ரன் ஓடினர் பாகிஸ்தான் வீரர்கள். ஓவர் த்ரோ ஆன பந்தை பிடித்து மீண்டும் லாதம் வசம் வீசினர். அந்த பந்து மிக மோசமாக வந்தது. லாதம் அதை விட்டுவிட ஐந்தாவது ரன்னை எடுத்தது பாகிஸ்தான்.

பீல்டிங் செய்யாம விட்டுருக்கலாமே
நியூசிலாந்து அடித்த பீல்டிங் கூத்தை பார்க்கும் போது, "ஏம்பா.. நீங்க பீல்டிங் பண்ணாம சும்மா நின்னுட்டு இருந்தா கூட பவுண்டரி போய் நாலு ரன் தான் கிடைச்சுருக்கும். இப்படி ஓவரா பீல்டிங் பண்ணி அஞ்சு ரன் கொடுத்து வச்சுருக்கீங்களே" என கேட்கத் தோன்றுகிறது.

மழையால் போட்டி ரத்து
நல்ல வேளையாக பாகிஸ்தான் 6.5 ஓவர்கள் பேட்டிங் செய்து முடித்த போது அம்பயர் மழையால் போட்டியை நிறுத்தினார். அதன் பின் மழை வெளுத்து வாங்கியதால் போட்டி கைவிடப்பட்டது. இரு அணிகளும் தொடரை 1-1 என பகிர்ந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications