Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேசத்தை வைச்சு செஞ்ச நியூசி.. முதல் இடத்தில் ராஸ் டெய்லர்.. மூன்றாம் இடத்தில் நியூசி.

டுனேடின் : நியூசிலாந்து அணி வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதன் மூலம், நியூசிலாந்து அணி தரவரிசையில் முன்னேறியுள்ளது. அதே சமயம், மூன்றாவது ஒருநாள் போட்டியில் ராஸ் டெய்லர் அரைசதம் அடித்து புதிய சாதனை செய்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் புள்ளிகள்

நியூசிலாந்து அணியின் புள்ளிகள்

நியூசிலாந்து அணி வங்கதேச தொடருக்கு முன்னதாக இந்தியாவிடம் ஒருநாள் தொடரை 4-1 என்ற நிலையில் இழந்தது. இதனால், 111 புள்ளிகளுடன் இருந்த அந்த அணி நான்காம் இடத்தில் இருந்தது.

3ஆம் இடத்தில் நியூசிலாந்து

3ஆம் இடத்தில் நியூசிலாந்து

அடுத்து வங்கதேச தொடரை 3-0 என கைப்பற்றிய நியூசிலாந்து ஒரு புள்ளி கூடுதலாக பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. நான்காம் இடத்தில் தென்னாப்பிரிக்க அணி 111 புள்ளிகளுடன் இடம் பெற்றுள்ளது.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

வங்கதேச அணி இந்த தொடரை இழந்த நிலையில், மூன்று புள்ளிகள் இழந்து 90 புள்ளிகளுடன், முன்பு இருந்த ஏழாம் இடத்திலேயே தொடர்கிறது. அடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் ஆட உள்ளன.

ராஸ் டெய்லர் சாதனை

ராஸ் டெய்லர் சாதனை

மூன்றாம் போட்டியில் 69 ரன்கள் அடித்த நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் அந்த அணியில் அதிக ஒருநாள் போட்டி ரன்கள் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

பிளெம்மிங்கை முந்தினார்

பிளெம்மிங்கை முந்தினார்

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெம்மிங், 279 போட்டிகளில் 8007 ரன்கள் குவித்து அந்த அணியின் அதிக ஒருநாள் போட்டி ரன்கள் அடித்த வீரராக நீண்ட காலமாக இருந்து வந்தார்.

அசத்தல் ராஸ் டெய்லர்

அசத்தல் ராஸ் டெய்லர்

அந்த சாதனையை முறியடித்துள்ள ராஸ் டெய்லர் தற்போது 218 போட்டிகளில் 8026 ரன்கள் கடந்துள்ளார். ராஸ் டெய்லர் ஒருநாள் போட்டிகளில் 20 சதங்கள், 47 அரைசதங்கள் அடித்துள்ளார். அவரது சராசரி 48.34 ஆகும்.

Story first published: Wednesday, February 20, 2019, 16:10 [IST]
Other articles published on Feb 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+