இதுல போயி முதலிடமா…? நியூசிலாந்துக்கு வந்த கொடுமையை பாருங்க.. புலம்பும் ரசிகர்கள்
Recommended Video
மான்செஸ்டர்: நடப்பு உலக கோப்பையில் முதல் 10 ஓவர்களில் மிகவும் குறைந்த ஸ்கோர் அடித்த அணி என்ற சாதனையை நியூசிலாந்து பெற்றிருக்கிறது.
உலக கோப்பையின் முதல் அரை இறுதியான இந்தியா, நியூசிலாந்து மோதும் போட்டி இடையே மான்சஸ்டர் நகரில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் குப்தில் ஒரு ரன்னில் பும்ரா பந்துவீச்சில் வெளியேறினார்.
பின்னர் நிக்கோலசுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் வில்லியம்சன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய பவுலர்களின் நேர்த்தியான பந்துவீச்சை கண்டு அவர்கள் ரன் எடுக்கவும், விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ளவும் திணறினர்.

வெறும் 27 ரன்கள்
எனவே முதல் 10 ஓவர்களில் நியூசிலாந்து, ஒரு விக்கெட் இழப்பிற்கு வெறும் 27 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது நடப்பு உலக கோப்பை தொடரில் எடுக்கப்பட்ட மிகவும் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். அதாவது பவர்பளேயில் ஒரு அணி எடுக்கும் மிகவும் குறைந்தபட்ச ஸ்கோராகும்.

இந்திய போட்டி
இதற்கு முன்பு நடப்பு தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா முதல் 10 ஓவர்களில் எடுத்த 28 ரன்களே குறைந்த ஸ்கோராக இருந்தது.இது தவிர, இதே நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்களில் 30 ரன்கள் எடுத்திருந்தது.

3 முறை குறைவான ஸ்கோர்
அதேபோல ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 31 ரன்கள் எடுத்தது. ஆகவே முதல் 10 ஓவர்களில் எடுக்கப்பட்ட 5 குறைவான ஸ்கோர்களில் நியூசிலாந்து அணி 3 முறை எடுத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நியூசிலாந்து பவர்ப்ளேவில் மட்டமாக ஆடி வருவது ரசிகர்களுக்கு அதிருப்தியை உண்டு பண்ணியிருக்கிறது.

இன்று மீண்டும் ஆட்டம்
நேற்றைய போட்டியின் போது மழை காரணமாக நிறுத்தப்பட்ட ஆட்டம், விட்ட இடத்தில் இருந்து இன்று மீண்டும் தொடங்கும். நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப் பட்டது.


Click it and Unblock the Notifications