Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானை வீழ்த்தியாச்சுல்ல.. இந்தியாவின் பாங்ரா டான்ஸ் ஆடி கொண்டாடிய நியூசிலாந்து வீரர்கள்

Recommended Video

பாகிஸ்தானை வீழ்த்திய மகிழ்ச்சியில் பாங்ரா டான்ஸ் ஆடிய நியூசிலாந்து வீரர்கள்- வீடியோ

அபுதாபி : அபுதாபியில் நடைபெற்ற நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கையே பெரும்பாலும் ஓங்கி இருந்தது. அந்த அணியே வெற்றி பெறும் என கணித்த நிலையில், நியூசிலாந்து அணி 4 ரன்களில் வென்று வரலாறு படைத்தது.

இந்த போட்டியின் வெற்றிக்கு பின் மகிழ்ச்சியில் இருந்த நியூசிலாந்து வீரர்கள் தங்கள் உடைமாற்றும் அறையில் பாங்ரா நடனம் ஆடி கொண்டாடியுள்ளனர்.

அஜாஸ் பட்டேல் தான் காரணம்

நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் அஜாஸ் பட்டேல் இவருக்கு இதுவே முதல் டெஸ்ட் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியிலேயே முத்திரை பதித்த அஜாஸ் பட்டேல் இரண்டாவது இன்னிங்க்ஸில் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். இவரின் பெயரில் இருந்தே இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என கணிக்கலாம்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

அஜாஸ் பட்டேல் தவிர்த்து ஜீத் ராவல், இஷ் சோதி என்ற இரு இந்திய வம்சாவளி வீரர்கள் நியூசிலாந்து அணியில் இருக்கிறார்கள். இவர்களில் இருவர் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண் போன்ற ஐக்கிய அரபு நாட்டில் வைத்து வீழ்த்திய மகிழ்ச்சியில் ஹிந்தி பாப் பாடல் ஒன்றுக்கு பாங்ரா நடனம் ஆடினர். மற்ற நியூசிலாந்து வீரர்கள் இவர்கள் ஆடிய நடனத்தை கண்டு சிரித்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ காட்சி ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

கடைசியில் சொதப்பிய பாகிஸ்தான்

கடைசியில் சொதப்பிய பாகிஸ்தான்

இந்த டெஸ்ட் போட்டியானது பாகிஸ்தானுக்கு மிக குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் டெஸ்ட் போட்டி தோல்வியை அளித்துள்ளது. அதே சமயம், மிக குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் டெஸ்ட் போட்டி வெற்றியை அளித்துள்ளது. பாகிஸ்தான் அணி கடைசி நேரத்தில் சொதப்பியதால் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

டெஸ்ட் போட்டிகளுக்கு நல்லது

டெஸ்ட் போட்டிகளுக்கு நல்லது

கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் டெஸ்ட் போட்டிக்கான ரசிகர்கள் குறைந்து வரும் நிலையில், இது போன்ற டெஸ்ட் போட்டிகளால் ரசிகர் கூட்டம் அதிகரிக்கும் என கூறியுள்ளனர்.

ஹார்ட் பீட்டை ஏற்றி, நகத்தை கடிக்க வைத்த டெஸ்ட் போட்டி.. வெறும் 4 ரன்களில் கிடைத்த வெற்றி

Story first published: Tuesday, November 20, 2018, 16:50 [IST]
Other articles published on Nov 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+