Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள்

லக்னோ : இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 99 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச டி20 ஸ்கோரை நியூசிலாந்து பதிவு செய்துள்ளது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில், டாசை இழந்த இந்திய அணி, முதலில் பந்துவீச பணிக்கப்பட்டது.

இந்திய அணியில் உம்ரான் மாலிக் நீக்கப்பட்டு, சாஹல் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட, 4 சுழற்பந்துவீச்சாளர்களுடன் இந்தியா விளையாடியது.

ஆட்டமிழப்பு

ஆட்டமிழப்பு

முதலில் அதிரடியாக ஆட முற்பட்ட நியூசிலாந்து அணி, பிறகு சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. 2 பவுண்டரிகளை அடித்த பின் ஆலன் 11 ரன்களில் சாஹ்ல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து சிஎஸ்கே வீரர் கான்வேவும் 11 ரன்களில் வாசிங்டன் சுந்தர் பந்துவீச்சில் வெளியேறினார்.

தடுமாற்றம்

தடுமாற்றம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் கிளன் பிலிப்ஸ் 5 ரன்களில் எடுத்த நிலையில், தீபக் ஹூடா பந்து வீச்சில் போல்ட் ஆனார். அதன் பிறகு குல்தீப் யாதவும் தன தாக்குதலை தொடுக்க கடந்த ஆட்டத்தில் அரைசதம் விளாசிய டேரல் மிட்செல், இந்த ஆட்டத்தில் 8 ரன்களில் போல்ட் ஆனார்.

நிலைக்குலைந்த நியூசி

நிலைக்குலைந்த நியூசி

பொறுப்பாக விளையாடிய மார்க் சாப்மன் 14 ரன்களில் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார். இதனையடுத்து அணியை சரிவிலிருந்து மீட்க பிராஸ்வெல் மற்றும் கேப்டன் சாண்டனர் கடுமையாக போராடினர். இதில் பிராஸ்வெல் 14 ரன்களில் வெளியேற, சோதி 1 ரன்னிலும், பெகுர்சன் டக் அவுட்டாகியும் வெளியேறினார்.

இந்தியா அபாரம்

இந்தியா அபாரம்

கேப்டன் சாண்டனர் மட்டும் ஆட்டமிழக்காமல் 19 ரன்கள் சேர்க்க, நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்தது. இது இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் நியுசிலாந்து பதிவு செய்த குறைந்தபட்ச ஸ்கோராகும். இந்திய பந்துவீச்சு தரப்பில் ஆர்ஸ்தீப் 2 விக்கெட்டுகளையும், சிவம் மவியை தவிர மற்ற அனைவரும் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Story first published: Sunday, January 29, 2023, 21:18 [IST]
Other articles published on Jan 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+