வெலிங்டன்: சூதாட்ட புகாரில் சிக்கிய நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர், லூவின்சென்ட் தனது குற்றத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன்னிலையில் ஒப்புக்கொண்ட நிலையில் அவருக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட்டில் லன்காசையர் அணிக்காக விளையாடியவர் நியூசிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான, லூவின்சென்ட். கவுண்டி கிரிக்கெட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதன் காரணமாக, தனது திறமைக்கும் குறைவான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக லூவின்சென்ட் மீது புகார் எழுந்தது.
இதுகுறித்து ஐசிசி விசாரணை நடத்திய நிலையில், தன்மீதான குற்றத்தை வின்சென்ட் ஒப்புக்கொண்டார். மேலும், தான் ஒரு ஏமாற்று பேர்வழி என்றும், தாய்நாட்டுக்கும், விளையாட்டுக்கும் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாகவும் ஒப்புதல் வாக்குமூலமும் அளித்துள்ளார். இதையடுத்து வின்சென்டுக்கு ஆயுட்கால தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.