Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபிக்கு அடுத்த 4 போட்டிகள் ரொம்ப முக்கியம்... பரபரப்பு காட்டும் கோச்

துபாய் : ஐபிஎல் பட்டியலில் 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 3வது இடத்தில் உள்ளது ஆர்சிபி அணி.

நேற்று நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 59 ரன்களில் தோல்வியை தழுவியுள்ளது ஆர்சிபி.

இந்நிலையில் ஆர்சிபி விளையாடவுள்ள அடுத்த 4 போட்டிகள் மிகவும் முக்கியமானவை மற்றும் கடினமானவை என்று அந்த அணியின் கோச் சைமன் காட்டிச் தெரிவித்துள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் முதலிடம்

டெல்லி கேபிடல்ஸ் முதலிடம்

கடந்த மாதம் 19ம் தேதி முதல் ஐபிஎல் 2020 சீசனுக்கான போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் அனைத்து அணிகளும் ஆர்வத்துடன் பங்கேற்று ஆடி வருகின்றன. சில அணிகள் ஐபிஎல் பட்டியலில் முதலிடத்திற்கு வர போராடி வருகின்றன. ஆயினும் தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.

3வது இடத்தில் ஆர்சிபி

3வது இடத்தில் ஆர்சிபி

நேற்றைய ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 59 ரன்களில் அந்த அணியை வெற்றி கொண்டு ஐபிஎல் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. நேற்றைய போட்டியில் தோற்றதன்மூலம் 3 இடத்திற்கு இறங்கியுள்ளது ஆர்சிபி. வரும் 10ம் தேதி சிஎஸ்கேவுடன் அந்த அணி மோதவுள்ளது.

சிஎஸ்கேவுடன் முக்கிய போட்டி

சிஎஸ்கேவுடன் முக்கிய போட்டி

இந்நிலையில் அடுத்து ஆர்சிபி ஆடவுள்ள 4 போட்டிகள் அணிக்கு மிகவும் முக்கியமானவை என்று அந்த அணியின் கோச் சைமன் காட்டிச் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 8 நாட்களில் 4 போட்டிகளில் ஆர்சிபி விளையாடவுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கேவுடன் அந்த அணி வரும் 10ம் தேதி விளையாடவுள்ள போட்டி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

கடினமான போட்டிகள்

கடினமான போட்டிகள்

தொடர்ந்து 8 நாட்களில் 4 போட்டிகளில் ஆர்சிபி மோதவுள்ள நிலையில், அந்த போட்டிகள் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் காட்டிச் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் அணி வீரர்கள் மனஉறுதியுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆர்சிபியின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Story first published: Tuesday, October 6, 2020, 19:22 [IST]
Other articles published on Oct 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+