அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் எங்கு நடக்கப் போகிறது தெரியுமா?
Recommended Video

டெல்லி: அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளதால், 12வது ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரை, ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் தற்போது நடந்து வருகிறது. ஐபிஎல் 12வது சீசன் போட்டிகள், அடுத்த ஆண்டு மார்ச் 29 முதல், மே 19ம் தேதி வரை நடக்க உள்ளது.

அந்த நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளதால், ஐபிஎல் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டது.
ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரசு எமிரேட்சில் நடத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. 2014லும் நாடாளுமன்றத் தேர்தலால், அந்த ஆண்டு முதல் இரண்டு வார ஐபிஎல் போட்டிகள் யுஏஇயில் நடத்தப்பட்டது.
இந்த ஆண்டும், அதேபோல், சில போட்டிகளை யுஏஇயிலும், மீதமுள்ள போட்டிகளை இந்தியாவிலும் நடத்துவது குறித்து ஆராயப்படுகிறது. தேர்தல் தேதிகள் அறிவிப்புக்கு பிறகே அது குறித்து முடிவு செய்ய முடியும்.
2009ல் இரண்டாவது ஐபிஎல் போட்டிகளைப் போலவே, அடுத்த ஆண்டும் தென்னாப்பிரிக்காவில் நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நேர வித்தியாசம் காரணமாக, யுஏஇயில் நடத்துவது என்று தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications