Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் அதிரடி நிகோலஸ் பூரனின் நிச்சயதார்த்தம்.. வாழ்த்துக்களால் நனைய வைத்த பஞ்சாப் வீரர்கள்

ட்ரினிடாட் அண்ட் டோபாகோ : ஐபிஎல் 2020 சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் நிகோலஸ் பூரன் தன்னுடைய நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தன்னுடைய நீண்ட நாள் தோழி அலிசா மிகுவல்லுடன் அவர் நிச்சயதார்த்தம் செய்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து அவரது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

பஞ்சாப் அணி வீரர் பூரன்

பஞ்சாப் அணி வீரர் பூரன்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் நிகோலஸ் பூரன். நடந்து முடிந்துள்ள சீசனில் அந்த அணிக்கு அவரது பங்களிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. அணியில் அதிக ரன் குவித்த வீரர்களில் 3வது இடத்தை பூரன் 14 போட்டிகளில் 353 ரன்களுடன் பிடித்துள்ளார்.

இன்ஸ்டாவில் புகைப்படம் பகிர்வு

இன்ஸ்டாவில் புகைப்படம் பகிர்வு

இந்த தொடர் முழுவதிலும் அவரது காதலி அவருடன் இருந்து அவரை ஊக்குவித்தார். இந்நிலையில் அவர் அலிசாவுடனான தனது நிச்சயதார்த்தத்தை நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளார். தன்னுடைய காதலிக்கு அவர் மோதிரம் அணிவித்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

பஞ்சாப் வீரர்கள் வாழ்த்து

பஞ்சாப் வீரர்கள் வாழ்த்து

இதையடுத்து அவரது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். மன்தீப் சிங் மற்றும் அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டவர்கள் பஞ்சாபியில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். இதே போல பூரனின் கரீபியன் அணியை சேர்ந்த ஜேசன் ஹோல்டர் மனிதர்கள் வித்தியாசப்பட்டாலும் அன்பு மட்டும் பரிசுத்தமானது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து போட்டிகள்

தொடர்ந்து போட்டிகள்

கீரன் பொல்லார்ட், பூரனை ப்ரொபஷனல் என்று பாராட்டி, வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மயங்க் அகர்வால், ஜிம்மி நீசம் போன்ற வீரர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கவுள்ள பூரன், தொடர்ந்து பிக் பாஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளார்.

Story first published: Wednesday, November 18, 2020, 15:49 [IST]
Other articles published on Nov 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+