Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காவ்யா மாறன் மீதான விமர்சனங்கள்.. ஒரே ஒரு போட்டி மூலம் கடும் பதிலடி.. நிகோலஸ் பூரணின் அசுர ஆட்டம்!

வெஸ்ட் இண்டீஸ்: சன்ரைசர்ஸ் அணி உரிமையாளர் காவ்யா மாறன், மெகா ஏலத்தின் போது விமர்சிக்கப்பட்ட நிலையில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.

இந்த மெகா ஏலத்தில் அனைத்து அணிகளும் சிறப்பான வீரர்களை தேர்வு செய்தது என்றுக் கூறிய போதும் ஐதராபாத் அணி மீது மட்டும் விமர்சனம் இருந்தது.

ஐதராபாத் மீது விமர்சனம்

ஐதராபாத் மீது விமர்சனம்

இதற்கு காரணம் காவ்யா மாறன் எடுத்த சில துணிச்சல் முடிவுகள் தான். ஐபிஎல்-ல் அனுபவமுள்ள வீரர்களை எடுக்க தொடக்கத்திலேயே மற்ற அணிகள் அதிக தொகைகள் செலவழித்தன. ஆனால் அமைதி காத்த ஐதராபாத் அணி சற்று ஃபார்ம் அவுட்டான வீரர்கள், சமீபத்தில் எந்த போட்டியிலும் இடம்பெறாமல் இருக்கும் வீரர்களை கோடிகள் செலவழித்து எடுத்தது.

வீரர்கள் விவரம்

வீரர்கள் விவரம்

உதாரணத்திற்கு டி.நடராஜன் ரூ.4 கோடி, நிகோலஸ் பூரண் ரூ.10.75 கோடி, அபிஷேக் சர்மா ரூ.6.50 கோடி, கார்த்திக் தியாகி ரூ. 4 கோடி என பணத்தை வாரி வழங்கியது. குறைந்த தொகையில் எடுக்கப்பட்ட வீரர்களும் அனுபவம் குறைந்த இந்திய வீரர்கள் தான். இதனால் காவ்யா மாறன் பெரும் சொதப்பல் செய்திருந்ததாக விமர்சனங்கள் பரவி வந்தன.

பூரணின் பதிலடி

பூரணின் பதிலடி

இந்நிலையில் அது தவறு என ஒருவர் நிரூபித்துள்ளார். ட்ரினிடெட் டி10 ப்ளாஸ்ட் என்ற 10 ஓவர் போட்டி வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த போட்டியில் விளையாடிய நிகோலஸ் பூரண் வெறும் 37 பந்துகளில் சதம் விளாசி அனைவரின் வாயையும் பிளக்கவைத்தார்.

ஒரு ஆட்டம் மட்டுமல்ல

ஒரு ஆட்டம் மட்டுமல்ல

லெதர்பேக் ஜெயிண்ட்ஸ் அணிக்காக விளையாடிய பூரண், 128 என்ற இலக்கை நோக்கி களமிறங்கினார். அப்போது 37 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் சதத்தை விளாசி வெற்றியை தேடிக்கொடுத்தார். இந்த ஒரு போட்டியை வைத்து மட்டும் பூரணின் ஃபார்மை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

தொடர் சதங்கள்

தொடர் சதங்கள்

இதற்கு முன்னர் அவர் விளையாடிய இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் , 3 அரைசதங்களை தொடர்ச்சியாக விளாசி அசத்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை தழுவிய போதும் அவரின் ஆட்டம் மட்டும் தனி கவனத்தை ஈர்த்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்டிங் படு பலமாக மாறியுள்ளது.

Story first published: Tuesday, March 1, 2022, 16:21 [IST]
Other articles published on Mar 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+