Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அது என் ஆளு.. இங்கிலாந்து வீரருடன் சண்டை போட்ட கோலி.. காதலிக்காக நடந்த மோதல்.. வெளியான ரகசியம்!

லண்டன் : முன்னாள் இங்கிலாந்து வீரர் நிக் காம்ப்டன், விராட் கோலியுடன் 2012 டெஸ்ட் தொடரில் நடந்த மோதல் குறித்து கூறி உள்ளார்.

அப்போது விராட் கோலியின் (முன்னாள்) காதலியுடன், நிக் காம்ப்டன் பேசியதாகவும், அதனால் கோலி கோபம் அடைந்து அவரை சீண்டியதாகவும் அவர் கூறி உள்ளார்.

பின் இந்த விஷயம் இங்கிலாந்து அணிக்குள் பரவியதை அடுத்து இங்கிலாந்து வீரர்கள் விராட் கோலியை இதை வைத்தே கோபப்படுத்தி அவர் விக்கெட்டை வீழ்த்தியதாகவும் நிக் காம்ப்டன் கூறி உள்ளார்.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

2012ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அந்த தொடரை 2 - 1 என கைப்பற்றி சாதனை செய்தும் இருந்தது அந்த அணி. 1984-85க்குப் பின் இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் பெற்ற முதல் டெஸ்ட் தொடர் வெற்றி அது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

அந்த தொடர் துவங்குவதற்கு முன் கெவின் பீட்டர்சன், யுவராஜ் சிங் ஆகியோருடன் நிக் காம்ப்டன் வெளியே சென்றுள்ளார். அப்போது விராட் கோலியின் தோழியும் அவர்களுடன் சென்றுள்ளார். அப்போது நிக் காம்ப்டன், அவருடன் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

சீண்டினார்

சீண்டினார்

இந்த தகவல் விராட் கோலிக்கு தெரிந்த பின் டெஸ்ட் தொடரில் நிக் காம்ப்டன் பேட்டிங் செய்ய வரும் போதெல்லாம் அவரை இந்த விவகாரம் பற்றி பேசி சீண்டி உள்ளார். அவர் தன் காதலி என கூறி உள்ளார். ஆனால், நிக் காம்ப்டன் இதில் "செம ட்விஸ்ட்" இருப்பதை பற்றியும் கூறி உள்ளார்.

முன்னாள் காதலன்

முன்னாள் காதலன்

அதாவது விராட் கோலி காதலி என குறிப்பிட்டாலும், அவரின் தோழி கோலி தன் முன்னாள் காதலன் என்றே நிக் காம்ப்டனிடம் கூறி இருக்கிறார். பின்னர், இந்த விஷயத்தை வைத்து இங்கிலாந்து வீரர்கள் விராட் கோலியை சீண்டியதாகவும் காம்ப்டன் கூறினார்.

வெளியே சென்றோம்

வெளியே சென்றோம்

"அந்த தொடரில் நிச்சயம் நான் கோலியிடம் இருந்து சில வார்த்தைகளை கேட்டேன். அந்த தொடருக்கு முன் நான், கெவின் பீட்டர்சன், யுவராஜ் சிங் மாலை வெளியே சென்றோம். அப்போது அவரது முன்னாள் காதலியுடன் நான் பேசிக் கொண்டு இருந்தேன்." என்றார் நிக் காம்ப்டன்.

கோலி ஏற்றுக் கொள்ளவில்லை

கோலி ஏற்றுக் கொள்ளவில்லை

மேலும், "நான் அவருடன் பேசிக் கொண்டு தான் இருந்தேன். நான் அவருடன் பேசினேன் என்ற விஷயம் தெரிந்த உடன் விராட் கோலி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நான் ஒவ்வொரு முறை பேட்டிங் செய்ய சென்ற போதும் அவர் ஏதாவது ஒன்றை கூறுவார்." என்றார்.

யார் சரியாக சொல்கிறார்கள்?

யார் சரியாக சொல்கிறார்கள்?

"கோலி அவர் என் காதலி என கூறினார். ஆனால், அவரோ கோலி தன் முன்னாள் காதலர் என கூறினார். எனக்கு, "யார் இந்த கதையை சரியாக சொல்கிறார்கள்?" என்ற தோன்றியது. நான் சொல்வது புரிகிறதா?" என்றார் நிக் காம்ப்டன்.

வேடிக்கையான விஷயம்

வேடிக்கையான விஷயம்

"அப்போது இது வேடிக்கையான விஷயமாக இருந்தது. இங்கிலாந்து அணியில் இருந்த வீரர்கள் இதை பிடித்துக் கொண்டார்கள். நாங்கள் இதை வைத்து அவரை வழியனுப்பி வைத்தோம். அவருக்குள் செல்ல இதை பயன்படுத்தினோம்." என்றார் நிக் காம்ப்டன்.

நல்ல நோக்கத்தில் தான்

நல்ல நோக்கத்தில் தான்

"கோலி உலகத்தரம் வாய்ந்த வீரர். அந்த தொடரில் கடைசி போட்டியில் அவர் சதம் அடித்தார். அந்த தொடரில் இது வேடிக்கையான நகைச்சுவையாக இருந்தது. நான் எப்போதும் இதை நினைத்து சிரிப்பேன். ஆனால், எல்லாமே நல்ல நோக்கத்தில் தான்" என்றார் நிக் காம்ப்டன்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

நிக் காம்ப்டன், தன் ஓய்வுக்குப் பின் தொடர்ந்து கோலியை விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித்தை கிண்டல் செய்த ரசிகர்களை அமைதியாக இருக்குமாறு கூறினார். அப்போது அதை கடுமையாக எதிர்த்தார் நிக் காம்ப்டன்.

Story first published: Sunday, June 14, 2020, 15:21 [IST]
Other articles published on Jun 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+