Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"பெண் என்ற உணர்வே தெரியாது".. ரஸாக்கின் ஆபாச கருத்து.. கண்ணத்தில் ஓங்கி ஒன்னு வைத்த வீராங்கனை

இஸ்லாமாபாத்: பெண் கிரிக்கெட்டர்கள் குறித்து பேசி வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரஸாக்.

Recommended Video

Sledging- Another Side Of Cricket! Racism, Body Shaming in Gentleman's Game? | OneIndia Tamil

பாகிஸ்தான் அணி சர்வதேச கிரிக்கெட்டில் தகதிமிதோம் போட்டுக் கொண்டிருக்க அப்துல் ரஸாக் வாயை கொடுத்து வசமாக மாட்டியிருக்கிறார்.

கருத்து சொல்கிறேன் என்று ஏதேதோ உளறிய ரஸாக்கை, இன்று சமூக தளங்களில் பிரித்து மேய்ந்து வருகின்றனர் ரசிகர்கள்.

 டீசண்ட் ஆல் ரவுண்டர்

டீசண்ட் ஆல் ரவுண்டர்

பாகிஸ்தான் முன்னாள் ஆல் ரவுண்டர் அப்துல் ரஸாக். டீசண்ட் ஆல் ரவுண்டர். அன்வர், அப்ரிடி, இன்சமாம் என்று பாகிஸ்தான் கலக்கிக் கொண்டிருந்த காலத்தில், பாகிஸ்தான் அணியின் 7வது டவுன் வீரராக களமிறங்கி 30 ரன்னாவது அடித்துவிட்டு தான் செல்வார். அதேபோல், அட்லீஸ்ட் ஒரு போட்டிக்கு ஒரு விக்கெட்டாவது எடுத்தும் விடுவார். நல்ல ஆல்ரவுண்டர் தான்.

 பெண் என்ற உணர்வு

பெண் என்ற உணர்வு

ஆனால், வாய் தான் சற்று நீளம். கிரிக்கெட் போட்டிகளில் எப்போதும் அமைதியாக காணப்பட்ட ரஸாக், ஓய்வு பெற்ற பிறகு, குறிப்பாக சமூக தளங்களில் அவ்வப்போது சில ஏடாகூட பாயிண்ட்களை சொல்லி சிக்கி சின்னாபின்னமாவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார். அப்படித்தான் இப்போதும் சிக்கியிருக்கிறார். அவர், கூறுகையில், "பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைகள், ஆண் வீரர்களைப் போல இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் தாங்களும் ஆண் வீரர்களுக்கு சரிசமமாக இருக்க எண்ணுகின்றனர். எந்தவொரு ,சாதனையாக இருந்தாலும், ஆண்கள் மட்டுமல்ல, தங்களாலும் அதைச் செய்ய முடியும் என்பதை அவர்கள் நிரூபிக்க விரும்புகிறார்கள். ஆனால், அவர்கள் சாதனைகளை நோக்கி செல்கையில், அவர்களிடையே திருமணம் செய்து கொள்வது குறித்த உணர்வே இல்லாமல் போய் விடுகிறது. இன்னும் சொல்லப்போனால், அவர்களின் கையைப் பிடித்தால் பெண் என்ற உணர்வே உங்களுக்கு இருக்காது என்று கூறியுள்ளார் ரஸாக்.

 உடல் உறுதி

உடல் உறுதி

ரஸாக் இதனை பாகிஸ்தான் வீராங்கனை நிடா தார் என்பவரை குறிப்பிட்டு சொன்னதாக தான் தெரிகிறது. இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள நிடா, "எங்கள் தொழிலில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் ஃபிட்னஸாக இருக்க வேண்டும். ஆகையால், உடல் உறுதியாக மாறுகிறது. ஆம்! உண்மையில் உடல் உறுதியாகிறது. நான் கிரிக்கெட் வீராங்கனையாக இல்லையென்றால் கூட, விளையாட்டு தொடர்பான ஏதாவது ஒரு பிரிவில் தான் இருந்திருப்பேன்" என்று கூறியுள்ளார்.

 சுளீர் பதிலடி

சுளீர் பதிலடி

இவரது பதிலில் எத்தனை தெளிவு பாருங்கள். நேரடியாக அவர் ரஸாக்கிற்கு பதில் சொல்லவில்லை. ஆனால், எங்கள் பெண்கள் உடலும் உறுதியாக தான் இருக்கும். அதுக்கு என்ன எப்ப? என்பதை மிக மிக டீசண்ட்டான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார் நிடா.

Story first published: Friday, July 16, 2021, 18:11 [IST]
Other articles published on Jul 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+