Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நிதிஷ் குமார் ரெட்டிக்கு பரிசுத் தொகை அறிவிப்பு.. ஆந்திர கிரிக்கெட் செம! குடும்பம் தந்த சர்ப்ரைஸ்

மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்டில் தனி ஆளாக நின்று சதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றிய நிதிஷ் குமார் ரெட்டிக்கு ரூ. 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை அந்திரா கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது.21 வயதான நிதீஷ் ரெட்டி, தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்து இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் முக்கிய பங்காற்றினார்.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நான்காவது டெஸ்டின் மூன்றாம் நாளில் அவர் 105 ரன்கள் அடிக்க, இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எட்டியது. நிதிஷ் ரெட்டியால் தான் இன்று இந்தியாவின் வெற்றி கதவு திறறந்துள்ளது. இது குறித்து ஆந்திர கிரிக்கெட் சங்கத் தலைவர் ACA தலைவர் கேசினேனி சிவநாத் இந்திய டெஸ்ட் மற்றும் சர்வதேச T20 போட்டிகளில் ரெட்டியின் சாதனைகளுக்காக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

india cricket

குறிப்பாக நான்காவது டெஸ்டின் போது, நிதிஷ் ரெட்டியின் சிறப்பான செயல்பாடு நடப்பு தொடரில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன் சந்தர் உடன் இணைந்து 8வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் கூட்டியதன் மூலம் ஃபாலோ ஆனை இந்தியா தவிர்த்ததன் மட்டுமல்லாமல், ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கேர்ரின் இடைவெளி குறைந்துள்ளது. இதன் மூலம் நிதீஷ், இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்கிறார்.

நிதீஷ் ரெட்டியின் இந்த ஆட்டத்தை கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டத் தவறவில்லை. சுனில் கவாஸ்கர் இவரது இன்னிங் இந்திய டெஸ்ட் வரலாற்றில் சிறந்த இன்னிங்ஸ் என்று புகழ்ந்தார்.. ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட், இளம் இந்திய வீரரின் பேட்டிங் திறனை புகழ்ந்து பாராட்டினார். 21 வயது வீரருக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக 25 லட்சம் வழங்கப்பட்டு இருப்பதற்கு ரசிகர்களும் வரவேற்பு அளித்துள்ளனர். இதன் மூலம் அணியில் உள்ள மற்ற வீரர்களும் ஊக்கத்துடன் விளையபட வழிவகுக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்களும் வரவேற்றுள்ளனர்.

இதனிடையே, நிதீஷ் ரெட்டியை ஆட்டம் முடிந்த உடன், அணியின் ஹோட்டலுக்கு சென்று அவர்களுடைய பெற்றோர்கள் பார்த்த காட்சி சமூக வலைத்தளத்தில வெளியாகி உள்ளது. ரூம் கதவை திறந்த உடன் நிதீஷ் குமாரின் தாய் தனது மகனை கட்டி அணைத்து முத்தமிட்டார். இதே போன்று அவருடைய சகோதரி மற்றும் தந்தை ஆகியோரும் நீதிஷ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Saturday, December 28, 2024, 20:07 [IST]
Other articles published on Dec 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+