Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி விலகல்? பிசிசிஐ தகவல்

மும்பை: இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், காயத்தில் இருந்து மீண்டு வரும் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி இந்தத் தொடரில் இடம்பெற வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆகஸ்ட் 15 முதல் 27 வரை கல்லே மற்றும் கொழும்பு நகரங்களில் இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணி ஜூலை 28 செவ்வாய்க்கிழமை அன்று பிசிசிஐ தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட உள்ளது.

Nitish Kumar Reddy Likely Out of India Test Squad for Sri Lanka Series as he continues his injury recovery at the BCCI center in Bengaluru

இதனிடையே, தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மையத்தில் மறுவாழ்வுப் (Rehabilitation) பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, தற்போது மீண்டும் பந்துவீசத் தொடங்கியுள்ளார். ஆனால், அவர் முழு உடற்தகுதி பெற கூடுதல் காலம் ஆகும் என்பதால், இலங்கை தொடரில் அவருக்கு ஓய்வளிக்கத் தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது.

ஹார்திக் பாண்டியாவுக்கு மாற்றாக வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக வளர்ந்து வரும் நிதிஷ் குமார் ரெட்டிக்கு மீண்டும் காயம் ஏற்பட்டது இந்திய அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. எனினும், இலங்கை மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு அதிகம் சாதகமாக இருக்கும் என்பதால், வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் இல்லாதது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் மானவ் சுதர், ஹர்ஷ் துபே போன்ற இளம் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள் தயாராக உள்ளனர். அதேவேளையில், முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தரும் பெங்களூருவில் தீவிர சிகிச்சையில் உள்ளார். அவர் இந்தத் தொடரிலிருந்து விலகினால் மற்றொரு ஆஃப்-ஸ்பின்னரை அணிக்குத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.

ஒன்றரை மாதத்தில் இந்திய அணியில் வாய்ப்பை இழக்கப் போகும் பிரின்ஸ் யாதவ்.. ஸ்ரேயாஸ் ஐயர் சொன்ன தகவல்

ஒன்றரை மாதத்தில் இந்திய அணியில் வாய்ப்பை இழக்கப் போகும் பிரின்ஸ் யாதவ்.. ஸ்ரேயாஸ் ஐயர் சொன்ன தகவல்

மேலும், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடரில் விளையாடுவது குறித்தும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட முகமது சிராஜ் டெஸ்ட் அணியில் இடம் பெறுவது குறித்தும் தேர்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். ரஞ்சி கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகிப் நபிக்கு முதன்முறையாக இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இஷான் கிஷன் செய்த தவறு.. 2 பேட்ஸ்மேன்கள் ஒரே பக்கம் நின்றும் ரன் அவுட் செய்யலை.. என்ன நடந்ததது?

இஷான் கிஷன் செய்த தவறு.. 2 பேட்ஸ்மேன்கள் ஒரே பக்கம் நின்றும் ரன் அவுட் செய்யலை.. என்ன நடந்ததது?
Story first published: Sunday, July 26, 2026, 11:51 [IST]
Other articles published on Jul 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+