Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

8 மாதங்களாக டி20 யில் சொதப்பும் இஷான் கிஷன்.. விமர்சனத்துக்கு லைக் செய்து மாட்டி கொண்ட இந்திய வீரர்

மும்பை : தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் மோசமாக செயல்பட்டு வரும் இஷான் கிஷனுக்கு, புதன்கிழமை நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வாய்ப்பளிக்கப்படலாம் என தெரிகிறது.

ஆனால் இஷான் கிஷன், கடந்த சில போட்டிகளால் சொதப்பி வருவது, அவருக்கு எதிரான விமர்சனத்தை வலுப்பெற்று வருகிறது.

இஷான் கிஷன் , வங்கதேசத்திற்கு எதிராக 131 பந்துகளில் 210 ரன்களை கடந்த மாதம் விளாசினார். ஆனால் அதன பிறகு இஷான் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து போராடி வருகிறார்.

மோசமான் ஃபார்ம்

மோசமான் ஃபார்ம்

இந்தியாவுக்காக எட்டு ஆட்டங்களில், ஐந்து T20I களில் மற்றும் மூன்று ODIகளில், இஷான் 120 பந்துகளை எதிர்கொண்டு ஐந்து ஒற்றை இலக்க ஸ்கோருடன் 93 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இஷான் கிஷன் அணியிலிருந்து நீக்க வேண்டும் என பல தரப்பு ரசிகர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நீக்கப்பட்ட வீரர்

நீக்கப்பட்ட வீரர்

இந்த நிலையில் தான் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட நிதிஷ் ராணா, இஷான் கிஷனை விமர்சித்து போட்ட டிவீட்டுக்கு லைக் போட்டு சிக்கி கொண்டார். இடது கை டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் பகுதி நேர ஆஃப் ஸ்பின்னரான நிதிஷ் ராணா 2021 ஐபிஎல் சீசனின் 383 ரன்கள் எடுத்திருந்தார்.

வாய்ப்பே இல்லை

வாய்ப்பே இல்லை

இதனையடுத்து ராணாவுக்கு இந்தியாவின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமானார். அவர் ஒரு ODI போட்டியில் விளையாடினார், ஏழு ரன்கள் எடுத்தார், மற்றும் இரண்டு T20I களில், 15 ரன்கள் எடுத்தார், அதற்கு பிறகு அவர் அணியிலிருந்து கைவிடப்பட்டார்.

விமர்சனத்துக்கு லைக்

விமர்சனத்துக்கு லைக்

இந்த நிலையில், டி20 ஐ கிரிக்கெட்டில் இஷான் கிஷனுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டும், அவர் மோசமாக விளையாடி வருவதை புள்ளி விவரத்துடன் ஒருவர் டிவீட் போட்டு இருந்தார். அதற்கு நிதிஷ் ராணா லைக் செய்து இருக்கிறார். கடந்த ஆண்டு ஜூன் முதல் இஷான் கிஷன் டி20 போட்டியில் 199 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 15.30 மற்றும் 106.41 ஸ்ட்ரைக் ரேட் ஆகும்.

Story first published: Monday, January 30, 2023, 20:59 [IST]
Other articles published on Jan 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+