Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னை கோபப்படுத்தினால், நடப்பதே வேறு.. இளம் வீரருக்கு முன்னாள் KKR கேப்டன் எச்சரிக்கை

டெல்லி: டெல்லி பிரீமியர் லீக் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதில் வெஸ்ட் டெல்லி லயன்ஸ் மற்றும் சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார் அணிக்கு இடையிலான போட்டி ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதற்கு காரணம் வெஸ்ட் டில்லி லயன்ஸ் அணிக்காக விளையாடிய கே கே ஆர் அணியின் முன்னாள் கேப்டன் நிதிஷ் ரானாவும், சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார் அணியில் லக்னோ அணிக்காக விளையாடிய டிக்விஸ் ரதியும் மோதலில் ஈடுபட்டனர். வழக்கம்போல் டிக்விஸ் ரதி, தன்னுடைய கோமாளித்தனத்தை வெளிப்படுத்த அதற்கு சிக்சர் மூலம் பதிலடி கொடுத்தார் நித்திஷ்ரானா.

Nitish Rana

இதனால் பொறுத்துக் கொள்ள முடியாத டிக்விஸ் ரதி, மீண்டும் நிதிஷ்குமார் ராணாவிடம் பிரச்சனைக்கு சென்றார். அதன்பின் களத்தில் நடுவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர். இது குறித்து என்ன நடந்தது என்று செய்தியாளர்கள் நிதிஷ் ரானாவிடம் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், இந்த பிரச்சனையில் யார் சரி, யார் மீது தவறு இருக்கிறது என்றெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை.

அவருடைய அணிக்கு வெற்றியை தேடி தர அவர் வந்துள்ளார். அதேபோல் நான் எனது அணியின் வெற்றிக்காக விளையாடுகின்றேன். விளையாட்டை மதிக்க வேண்டும் என்பது என்னுடைய பொறுப்பு. அதுபோல் அவருடைய பொறுப்பும் கூட .ஆனால் முதலில் தொடங்கியது திக்விஸ் ரதிதான். ஆனால் அது எப்படி ஆரம்பித்தது, எதனால் ஆரம்பித்தது என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன்.

அப்படி சொன்னால் அதில் ஒரு நியாயம் இருக்காது ஆனால் என் முகத்திற்கு நேராக யாரேனும் ஏதாவது சொன்னால் நான் அமைதியாக பொறுத்துக் கொண்டு எல்லாம் போக மாட்டேன். இப்படி தான் நான் என்னுடைய கிரிக்கெட் விளையாட்டை ஆரம்பித்தேன் என் முகத்திற்கு நேராக என்னை யாராவது கோபப்படுத்தினால் நிச்சயம் அதற்கான விளைவுகளை அவர்கள் சந்தித்தே ஆகவேண்டும்.

களத்தில் நான் பேட்டிங் செய்யும்போது,அவர் என்னை கோபப்படுத்தினார். அதற்கு சிக்ஸர்கள் மூலம் நான் பதிலளித்தேன் நேற்று அவ்வாறு தான் களத்தில் நடந்தது என்று நிதிஷ்ரானா கூறியுள்ளா.ர் அந்த ஆட்டத்தில் நிதிஷ் ரானா 55 பந்துகளில் 134 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, August 31, 2025, 15:14 [IST]
Other articles published on Aug 31, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+