Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகின் டாப் 3 சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் யார்? கும்ப்ளேக்கு இடம் அளிக்காத இங்கிலாந்து வீரர்

லண்டன் : உலகின் சிறந்த பேட்ஸ்மேன் பவுலர்கள் என்று கணக்கிட்டால் அதில் நிச்சயம் டாப் 3 வீரர்களில் ஒரு இந்திய வீரர் வந்துவிடுவார். அந்த அளவுக்கு கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் இதை விரும்பாத கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாட்டைச் சேர்ந்த இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவை எப்போதுமே தரம் தாழ்த்தி பேசும் பழக்கத்தையே வைத்திருப்பார்கள்.

இந்த நிலையில் உலகின் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளர் யார் என்று கேள்விக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் லயாட், அணில் கும்ப்ளே பெயரை சேர்க்காமல் பாகிஸ்தான் வீரரின் பெயரை சேர்த்திருப்பது ரசிகர்களை கோபப்படுத்திருக்கிறது.

cricket india cricket team Anil Kumble David Lyold Abdul Qadir

டெஸ்ட் கிரிக்கெட்டில் வார்னே, முரளிதரன் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற் பந்துவீச்சாளர் என்ற பெருமையை அணில் கும்ப்ளே படைத்திருக்கிறார். ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜிம் லேக்கரின் சாதனையை சமன் செய்திருக்கிறார். இப்படி பல்வேறு ரெக்கார்டுகளை படைத்திருக்கும் கும்ப்ளேவை டேவிட் லயாட் சேர்க்கவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், என்னை பொறுத்தவரை தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்றால் முரளிதரன், வார்னேவுக்கு பிறகு நான் பாகிஸ்தான் அப்துல் காதிரை தான் சொல்வேன். சுழற் பந்துவீச்சு என்ற கலையை செதுக்கியவர் அப்துல் காதிர். அவர் தன்னுடைய காலத்தில் ஒரு சிறந்த பந்து வீச்சாளராக இருந்தார்.

அவர் பந்தை வீசும் விதமும் ஸ்டைலும் அவ்வளவு அழகாக இருக்கும். லெக்ஸ்பின் முறை கிரிக்கெட்டில் அழிந்து வந்த நிலையில் அவர்தான் அதற்கு உயிர் கொடுத்தார். லெஸ்பின்னில் புதிய புரட்சியை அவர் ஏற்படுத்தினார் அப்துல் காதிரை காட்டிலும் அதிக விக்கெட் எடுத்தாலும் கூட நான் அப்துல் காதிரை தான் சொல்வேன். காதிரின் பந்துவீச்சை எதிர்கொள்வது அவ்வளவு சிரமமாக இருக்கும்.

அவருடைய பந்துவீச்சில் ஏதோ ஒரு ரகசியம் இருக்கும். அதை பேட்ஸ்மேன்களால் கண்டுபிடிக்க முடியாது. எனினும் அவர் எடுத்த விக்கெட்டுகள் அவருடைய திறமையை வெளிக்காட்டாது. அணில் கும்ப்ளே நல்ல உயரமான வீரர். இதனால் அவர் கையை தனது உயரத்துக்கு ஏற்ப பயன்படுத்தி பந்தை வேகமாக வீசுவார். இதன் மூலம் அவருக்கு நல்ல விக்கெட் கிடைக்கும் என்று அவர் கூறினார். அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகள், டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய நிலையில் காதிர் 236 விக்கெட் தான் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, August 11, 2024, 17:27 [IST]
Other articles published on Aug 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+