Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட்க்கு பெரிய ஷாக்.. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கூட வாய்ப்பு இல்லை.. காரணம் என்ன?

பெர்த் : டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ரிஷப் பண்ட் சேர்க்கப்படாதது, அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது,

டி20 உலககோப்பை தொடங்குவதற்கு முன்பாக ரிஷப் பண்டை வைத்து தான் ஐசிசி விளம்பரத்தையே செய்தது. அவ்வளவு ஏன் ஐபிஎல் தொடர் முடிந்த உடன் ரிஷப் பண்ட் தான் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டார்,

ஆனால், தற்போது இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கூட ரிஷப் பண்ட் சேர்க்கப்படாதது ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

வாய்ப்பு மறுப்பு

வாய்ப்பு மறுப்பு

சரி, இன்றைய ஆட்டத்தில் பேட்டிங்கை பயன்படுத்த, பந்துவீச்சாளர் ஒருவரை நீக்கிவிட்டு, பேட்ஸ்மேன் ஒருவரை சேர்க்க இந்திய அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால் ரிஷப் பண்ட்க்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரோகித் சர்மாவோ பிளேயிங் லெவனில் பண்டை சேர்க்காமல், தீபக் ஹூடாவை சேர்த்துள்ளார்.

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

இதனால் இந்திய அணியில் ஒரு இடதுகை பேட்ஸ்மேன்கள் கூட இல்லை. தீபக் ஹூடாவை விட திறமையான பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் இருந்தும், ஒரே ஒரு இடதுகை பேட்ஸ்மேனாக இருந்தும், பிளேயிங் லெவனில் அவர் இல்லாதது என் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்திய அணி நிர்வாகத்தின் இந்த செயலால் ரிஷப் பண்டின் உத்வேகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ரிஷப் பண்ட்க்காக குரல் கொடுத்த ஜாம்பவான்களின் கோரிக்கையையும் இந்திய அணி நிர்வாகம் கேட்கவில்லை என்று கூறியுள்ளனர்.

காரணம்

காரணம்

ஆனால் தீபக் ஹூடா ஒரு சுழற்பந்துவீச்சாளரும் கூட. அந்த ஒரு காரணத்திற்காக தான் பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற்று இருக்கிறார். மேலும் ரிஷப் பண்ட், ஷாட் பாலை எதிர்கொள்ள சிரமப்படுவார். இதன் காரணமாக ரிஷப் பண்டை சேர்த்தாலும் பிளேயிங் லெவனில் எவ்வித மாற்றமும் இருக்காது என்ற காரணத்தால் தான் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

அடுத்தது என்ன?

அடுத்தது என்ன?

இதனால், ரிஷப் பண்ட்டின் எதிர்காலம் குறித்து கவலைப்பட தேவையில்லை. தினேஷ் கார்த்திக்கிற்கு டி20 உலககோப்பைக்கு பிறகு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. இதனால் அந்த இடத்திற்கு பண்ட் தான் வருவார். ஆனால் அதற்குள் தனது பேட்டிங்கில் உள்ள குறைகளை ரிஷப் பண்ட் நிவர்த்தி செய்து, மீண்டும் பழைய மாதிரி விளையாட வேண்டும்.

Story first published: Sunday, October 30, 2022, 17:39 [IST]
Other articles published on Oct 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+