Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் கேஎல் ராகுலால் சஞ்சு சாம்சன் நீக்கம்.. இதுக்கு ஒரு முடிவே இல்லையா ? எப்படி சரி செய்யலாம்

மும்பை : இந்திய அணியின் தலைமை தேர்வுக்குழு உறுப்பினராக இருக்கும் சேட்டன் சர்மாவுக்கும் , சஞ்சு சாம்சனுக்கும் அப்படி என்னதான் பிரச்சனை என்று தெரியவில்லை. தொடர்ந்து சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்காமல் ஓரங்கட்டப்பட்டு வருகிறார்.

கே எல் ராகுல் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் சொதப்பி வருகிறார். கடைசியாக வங்கதேசத்துக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் 50 ரன்கள் அடித்தார்.

அதன் பிறகு அவர் ஒரு முறை கூட அரை சதம் அடிக்கவில்லை. இந்த நிலையில் கே எல் ராகுல் டி20 அணியில் நீக்கப்பட்டு இருந்தாலும் ஒரு நாள் அணியில் அவர்தான் விக்கெட் கீப்பராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இடமில்லையா?

இடமில்லையா?

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இதை போல் சுப்மான் கில்லும் அறிவிக்கப்பட்டிருக்கிறார். வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷனும் இந்திய அணியில் இருக்கிறார். இப்படி இருக்க விக்கெட் கீப்பர் என்ற இடத்திற்கு கே எல் ராகுல் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

யாருக்கு வாய்ப்பு

யாருக்கு வாய்ப்பு

இதனால் தொடக்க ஜோடியாக ரோகித் சர்மா உடன் இஷான் கிஷன் அல்லது சுப்மான் கில் ஆகியோரில் ஒருவர் இடம் பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் எப்போதும் போல் நடுவரிசையில் கே எல் ராகுல் விளையாடுவார். இதனால் இஷான் கிஷனுக்கு இடம் இருக்காது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சம்சனுக்கும் அணியில் இடம் இருக்காத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

ரசிகர்கள் கோரிக்கை

ரசிகர்கள் கோரிக்கை

கேஎல் ராகுல் மோசமான பார்மில் இருப்பதால் அவரை நீக்கிவிட்டு ஏன் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனினும் டி20 அணியில் இடம் கிடைத்திருப்பது வரவேற்கத்தக்க விஷயமாக இருந்தாலும், சஞ்து சாம்சனை தோனியின் இடத்திற்கு கொண்டுவர அணி நிர்வாகம் முயற்சி செய்ய வேண்டும் எனவும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய தேர்வு குழு உறுப்பினராவது சஞ்சுவிற்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னுரிமை

முன்னுரிமை

ஒருநாள் அணியை பொறுத்தவரை ரோகித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா என பேட்டிங் வரிசை இருக்கிறது. இதனால் இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷனுக்கு கூட இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனினும் பிளேயிங் லெவனில் ரோகித் சர்மா என்ன முடிவெடுக்க போகிறார்? அவர் ராகுலுக்கு முன்னுரிமை வழங்குவாரா? இல்லை கிஷனுக்கு முன்னுரிமை வழங்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Story first published: Wednesday, December 28, 2022, 13:51 [IST]
Other articles published on Dec 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+