தல… தல தான்..! அவரு மாதிரி ஒரு கேப்டன் உலகத்திலே இல்லை..! இத சொல்ல இத்தினி வருசம் உங்களுக்கு
மும்பை: தோனியை போன்று இந்திய அணிக்கு கடுமையாக உழைத்தவர் யாரும் இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் வானாளவ புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இந்திய அணியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக வெற்றிகரமாக வலம் வந்த தோனிக்கு கடந்த ஆண்டு அவருக்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது. உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவது குறித்து மட்டுமல்ல, ஒட்டு மொத்தமாக ஓய்வு பெறுவது குறித்தே விமர்சனங்கள் சகட்டு மேனிக்கு வந்து எழுந்தன.
2019ம் ஆண்டு தொடங்கியது முதல் தோனிக்கு சிறப்பான ஆண்டாக மாறியிருக்கிறது. ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடி தொடர்ந்து மூன்று அரைசதம் அடித்து அசத்தினார். அதன்பிறகும் சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போது ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக மிரட்டி வருகிறார்.

கபில்தேவ் பதில்
இந்நிலையில், தோனியின் ஆட்டத்திறன், அவரை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது:தோனியை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை.

உடல்திறன்
இந்திய அணிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு அதிகம். அவர் எவ்வளவு காலம் விளையாட விரும்புகிறார் என்பது யாருக்கும் தெரியாது. அதேபோல்தான், அவரது உடல்தகுதி எவ்வளவு காலம் ஒத்துழைக்கும் என்பதும் தெரியாது.

பங்களிப்பு
ஆனால், தோனியைப் போல் இந்திய அணிக்கு பங்களிப்பு செலுத்தியவர் யாருமில்லை. நாம் அவரை மதிக்க வேண்டும். அதோடு, வாழ்த்தவும் வேண்டும். இந்த உலக கோப்பையையும் அவர் பெற்று தருவார் என்று நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

இந்திய அணி சிறப்பு
தற்போதைய இந்திய அணி சிறப்பாக இருக்கிறது. ஆனால், உலக கோப்பை தொடரை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு அணியாக செயல்பட்டு அவர்கள் விளையாட வேண்டும்.

தேர்வுக்குழுவுக்கு மதிப்பு
ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளது குறித்தும் கபில்தேவ் பேசியிருக்கிறார். அவர் பேசியதாவது: தேர்வு குழுவினர் தங்களது பணியை செய்துள்ளார்கள். நாம் அதனை மதிக்க வேண்டும். பன்டுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்றால் அது சரியாக தான் இருக்கும் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications