For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் மினி ஏலம் - சிஎஸ்கே அணியில் தமிழக வீரர்கள் புறக்கணிப்பு.. ஒருவர் கூட இல்லை.. ரசிகர்கள் கோபம்

கொச்சி : ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடு ரசிகர்களுக்கு திருப்திகரமாக அமைந்தாலும் ஒரே ஒரு பெரிய குறையை மட்டும் அணி நிர்வாகம் வைத்திருக்கிறது.

தமிழகத்தின் தலைநகரமாக விளங்கும் சென்னையை மையமாக வைத்து தான் இந்த ஐபிஎல் அணி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தமிழக தமிழக வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை .

ஏனென்றால் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் நடத்தும் டிஎன்பிஎல் தொடரிலிருந்து ஏகப்பட்ட வீரர்கள் வருகின்றனர் .இவர்களில் யாராவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினால் அது ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கும் பெருமையாக இருக்கும் .

சாதனை வீரர் இல்லை

சாதனை வீரர் இல்லை

ஆனால் நடப்பு ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு தமிழக வீரரை கூட தேர்வு செய்யாமல் இருந்தது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. சென்னை அணி விடுவித்த நாராயண ஜெகதீசன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக விளங்க கூடியவர். தோனிக்கு அடுத்ததாக அவரை கூட பிளேயிங் லெவனில் வைத்து விளையாடி இருக்கலாம்.

பாபார் இந்திரஜித்தும் இல்லை

பாபார் இந்திரஜித்தும் இல்லை

அதுமட்டுமில்லாமல் இம்முறை நாராயண ஜெகதீசன் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். விஜய் ஹசாரே கோப்பையில் 5 சதம், ஒரு போட்டியில் இரட்டை சதம் என பட்டையை கிளப்பிய நாராயண் ஜெகதீசனை சிஎஸ்கே ஏலத்தில் எடுக்காமல் கைவிட்டது. இதேபோன்று தமிழக ஆல்ரவுண்டர் பாபா இந்திரஜித் சிஎஸ்கே அணியால் ஏலத்தில் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆதிக்கம் குறைந்தது

ஆதிக்கம் குறைந்தது

ஆனால் அவரையும் சிஎஸ்கே நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதேபோன்று கடந்த ஆண்டு மும்பை அணியால் தேர்வு செய்யப்பட்டு டிஎன்பிஎல் தொடரில் பேட்டிங் பந்துவீச்சு என்ன கலக்கிய சஞ்சய் யாதவ் இம்முறை சிஎஸ்கே அணியால் எடுக்கப்படுவார் என நினைக்கப்பட்டது. ஆனால் அவருக்கும் சிஎஸ்கே அணி தண்ணீர் காட்டியது. ஒரு காலத்தில் அஸ்வின், முரளி விஜய் ,பத்ரிநாத்,பாலாஜி என தமிழக வீரர்கள் சிஎஸ்கே அணியின் முக்கிய அங்கம் வகித்தனர்.

ஒருவர் கூட இல்லை

ஒருவர் கூட இல்லை

ஆனால் நாட்கள் செல்ல செல்ல சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் ஒரு தமிழக வீரர் கூட இடம்பெறுவதில்லை. தற்போது ஏலத்தில் கூட சென்னை அணி தமிழக வீரர்களை தேர்வு செய்வதில்லை. ஏற்கனவே அணியில் இருந்த சில தமிழக வீரர்களை விடுவித்த சென்னை அணி, இந்த மினி ஏலத்திலும் ஒருவரை கூட எடுக்காமல் விட்டது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. தற்போது இருக்கும் சிஎஸ்கே அணியில் ஒரு தமிழக வீரர் கூட இடம்பெறவில்லை.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இதை போன்று சிஎஸ்கே அணியில் இலங்கை வீரர்கள் இடம்பெறுவது தமிழக உணர்வை பாதிக்கும் வகையில் இருப்பதாக பல்வேறு ஆண்டுகளாக இங்கு உள்ள தமிழ் இயக்கங்கள் போர் கொடி தூக்கி வருகின்றனர். ஆனால் அதையும் மீறி இம்முறை 2 இலங்கை அணி வீரர்கள் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் தமிழக வீரர்கள் தான் ஒருவர் கூட இல்லாதது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Story first published: Saturday, December 24, 2022, 0:43 [IST]
Other articles published on Dec 24, 2022
English summary
No cricketers From Tamil nadu is not selected by csk in ipl mini auction 2023 ஐபிஎல் மினி ஏலம் - சிஎஸ்கே அணியில் தமிழக வீரர்கள் புறக்கணிப்பு.. ஒருவர் கூட இல்லை.. ரசிகர்கள் கோபம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+