Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த முறை கோப்பையை விட மாட்டாராம்... ஓய்வில்லாமல் உழைக்கும் ஆர்சிபி கேப்டன் கோலி

துபாய் : ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் 19ம் தேதி துவங்கி நவம்பர் 10ம் தேதி வரையில் 53 நாட்கள் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் உள்ளிட்ட வீரர்கள் துபாய் சென்றடைந்துள்ளனர்.

No Days Off: Virat Kohli Sweats It Out After Reaching Dubai

துபாய் சென்றடைந்த கேப்டன் விராட் கோலி, அங்கு குவாரன்டைனில் ஈடுபட்டுள்ள போதிலும் ஹோட்டல் அறையிலேயே தன்னுடைய பிட்னஸ் பயிற்சிகளை துவங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை ஆர்சிபி தன்னுடைய டிவிட்டரில் பகிர்ந்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் இந்த ஆண்டு யூஏஇயில் நடைபெறவுள்ள நிலையில், கடந்த 20ம் தேதியையொட்டி ஐபிஎல் அணிகள் அங்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ஆர்சிபி அணி வீரர்கள் துபாய் சென்றடைந்தனர்.

No Days Off: Virat Kohli Sweats It Out After Reaching Dubai

இந்நிலையில் அங்கு சென்ற வீரர்கள் குவாரன்டைனில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஹோட்டல் அறைகளில் உள்ள நிலையில், அங்கு சென்றும் தன்னுடைய பிட்னஸ் பயிற்சிகளை விடாமல் தொடர்ந்துள்ளார் கேப்டன் விராட் கோலி. ஐபிஎல்லில் 2 முறை இறுதிப்போட்டி வரை வந்து கோப்பையை தவறவிட்ட நிலையில் இந்த முறை கோப்பையை கண்டிப்பாக கைப்பற்ற அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வியர்வை வரும்வகையில் அவர் மேற்கொண்ட பிட்னஸ் பயிற்சியின் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, அதை ஆர்சிபி அணி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஓய்வில்லாமல் அவர் உழைப்பதாகவும் பெருமை தெரிவித்துள்ளது.

Story first published: Sunday, August 23, 2020, 18:38 [IST]
Other articles published on Aug 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+