ம்ஹூம்.. டி20 உலக கோப்பை பத்தி ஆகஸ்ட் வரைக்கும் ஒண்ணும் பேசப்படாது!
மும்பை : டி20 உலக கோப்பை குறித்து வரும் ஆகஸ்ட் மாதம் வரையில் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று ஐசிசி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Recommended Video
ஐபிஎல்-ன் சிறந்த கேப்டன் இவங்க தான்... வெளியான தகவல்
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை நடத்தப்பட டி20 உலக கோப்பை தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக வரும் செப்டம்பர் 30 வரை தன்னுடைய எல்லைகளை மூடுவதாக என ஆஸ்திரேலியா அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், அக்டோபர் வரை கால அவகாசம் உள்ளதால் தற்போது அதுகுறித்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஐசிசி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Story first published: Monday, April 20, 2020, 10:51 [IST]
Other articles published on Apr 20, 2020


Click it and Unblock the Notifications