For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆகஸ்ட் வரைக்கும் உள்ளூர் போட்டிங்க நடத்தப்படாது... இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அறிவிப்பு

லண்டன் : வரும் ஆகஸ்ட் 1ம் தேதி வரை உள்ளூர் போட்டிகள் எவையும் நடத்தப்படாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இங்கிலீஷ் சீசன் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No Domestic Cricket In England Until August: ECB

ஆயினும் இந்த அறிவிப்பு சர்வதேச போட்டிகளுக்கு பொருந்தாது என்பதால் வரும் ஜூலை மாதத்தில் இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் அணியின் டெஸ்ட் தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதிவரை உள்ளூர் போட்டிகள் எவையும் நடத்தப்படாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இங்கிலீஷ் சீசன் ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போர்டின் அறிவிப்பில் சர்வதேச போட்டிகள் குறித்த எதுவும் கூறப்படாத நிலையில், இங்கிலாந்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் டெஸ்ட் தொடரின் சுற்றுப்பயணம் ஜூலையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆகஸ்ட் மாதத்தில் ஆண்கள் மற்றும் மகளிரின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த போட்டிகளின் போது சமூக விலகலை கடைபிடித்து குறைந்த அளவிலான ரசிகர்களை அனுமதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சர்வதேச போட்டிகள் ரசிகர்கள் இல்லாத காலி மைதானங்களில் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இசிபியின் சிஇஓ டாம் ஹாரிசன், அனைத்து தளங்களிலும் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் வீரர்களின் பாதுகாப்புக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Friday, May 29, 2020, 8:33 [IST]
Other articles published on May 29, 2020
English summary
ECB has decided to postponed the domestic season until August 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+