Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியோட கேப்டனாகறதுக்கு எல்லா தகுதியும் அவருக்கு இருக்கு... ஷ்ரேயாஸ் குறித்து ஆஸி கீப்பர்

சிட்னி : இந்திய அணியின் கேப்டனாவதற்கான அனைத்து தகுதியும் ஷ்ரேயாஸ் ஐயரிடம் உள்ளதாக ஆஸ்திரேலிய கீப்பர் அலெக்ஸ் கேரே தெரிவித்துள்ளார்.

ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் ஒரே நேரத்தில் அவர் சிறப்பாக உருவாகியுள்ளதாகவும் கேரே கூறியுள்ளார்.

ஐபிஎல்லில் கடந்த 3 சீசன்களிலும் ஐயரின் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த சீசனில் 519 ரன்களை அவர் குவித்துள்ளார்.

தகுதியான ஷ்ரேயாஸ்

தகுதியான ஷ்ரேயாஸ்

இந்திய அணிக்கு வருங்கால கேப்டன் கிடைத்துள்ளதாக ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரே தெரிவித்துள்ளார். அதற்கான அனைத்து தகுதிகளும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு உள்ளதாகவும் கேரே கூறியுள்ளார். கேப்டனுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டால் அனைத்து தகுதிகளிலும் அவர் டிக் மார்க் வாங்குவார் என்றும் தெரிவித்துள்ளார்.

சிறப்பான முடிவு

சிறப்பான முடிவு

ஒரே நேரத்தில் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாக ஷ்ரேயாஸ் உருவாகியுள்ளதாக கேரே கூறியுள்ளார். ஐயரை டெல்லி கேபிடல்ஸ் கேப்டனாக தேர்ந்தெடுத்தது மிக சிறப்பான முடிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் 2020 சீசனில் அவர் தன்னுடைய அணியை இறுதிப்போட்டி வரையில் கொண்டு வந்ததையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அனைத்து தகுதிகளும் உள்ளது

அனைத்து தகுதிகளும் உள்ளது

இந்திய அணியை வழிநடத்துவதற்கான அனைத்து தகுதிகளும் ஐயருக்கு உள்ளதாகவும் கேரே கூறியுள்ளார். செய்தியாளர்களுடனான கலந்துரையாடலில் பேசிய கேரே, ஐயரிடம் நாம் எதிர்பார்ப்பதை காட்டிலும் அவர் அதிகமாகவே செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார். மேலும் அணி வீரர்களை இணைப்பதில் மிகச்சிறப்பாக செயல்படுவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

40 பந்துகள்... 93 ரன்கள்

40 பந்துகள்... 93 ரன்கள்

கடந்த 2018ல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக தனது முதல் போட்டியில் பங்கேற்ற ஐயர், கவுதம் கம்பீர் முதலிலேயே அவுட் ஆன நிலையில் 40 பந்துகளில் 93 ரன்களை குவித்தார். இதுவே இதுவரையிலான அவரது மிகச்சிறந்த ஸ்கோராக உள்ளது.

Story first published: Tuesday, November 17, 2020, 19:49 [IST]
Other articles published on Nov 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+