இந்தியா - வங்கதேச தொடரில் டிஆர்எஸ் கிடையாது!
டாக்கா: இந்தியா, வங்கதேசம் இடையே, வங்கதேசத்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரில் டிஆர்எஸ் முறை அமல்படுத்தப்படாது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.
ஜூன் 10ம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான தொடர் தொடங்கவுல்ளது. இதில் ஒரு டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகள் இடம் பெறுகின்றன.

ஜூன் 10ம் தேதி டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஜூன் 18, 21, 24 ஆகிய தேதிகளில் ஒரு நாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தத் தொடரின்போது நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய உதவும் டிஆர்எஸ் முறை பயன்படுத்தப்பட மாட்டாது என்று வங்கதேச கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
Story first published: Wednesday, June 3, 2015, 11:49 [IST]
Other articles published on Jun 3, 2015


Click it and Unblock the Notifications