Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிறிஸ் கெயிலுக்கு துரோகம் செய்த கிரிக்கெட் வாரியம்- அணியிலிருந்து ரசல் அதிரடி நீக்கம்..

பார்படாஸ்: டி20 உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, சூப்பர் 12 சுற்றில் வெளியேறியது.

இந்த தொடருக்கு பிறகு பேசிய கிறிஸ் கெயில், மேற்கிந்தியத் தீவுகளில் தான் கடைசி டி20 போட்டியை விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

அதற்கு ஏற்றார் போல், இம்மாதத்தில் அயர்லாந்துடன் ஒரு டி20 போட்டி நடைபெற இருந்தது. அந்தப் போட்டி தான் கிறிஸ் கெயிலுக்கு கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இந்த நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெயிலின் பெயர் இடம்பெறவில்லை. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அடையாளமாக விளங்கிய கெயிலுக்கு வாரியம் பிரியாவிடை அளிக்காதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

நிர்வாகிகள் விளக்கம்

நிர்வாகிகள் விளக்கம்

எனினும் அயர்லாந்து தொடர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், இந்த ஏற்பாட்டை செய்யவில்லை என்று மேற்கிந்திய தீவுகள் வாரிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் குறைந்த பிறகு, இதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரசல் நீக்கம்

ரசல் நீக்கம்

இதே போன்று மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி வீரர் ரசல் அணியில் சேர்க்கப்படவில்லை. பிக் பேஸ் தொடரில் விளையாடி நல்ல ஃபார்மில் இருந்தும் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. இதனிடையே கொரோனா அச்சுறுத்தலால் வரும் 8ஆம் தேதி தொடங்க உள்ள அயர்லாந்து தொடர் ரத்து செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இம்மாத இறுதியில் இங்கிலாந்துடன் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

அணி விவரம்

அணி விவரம்

பொலார்ட் ( கேப்டன்), நிக்கோலஸ் பூராண், ஃபெமியன் ஆலன்(இங்கிலாந்து தொடருக்கு மட்டும்) ,டேரன் பிராவோ (இங்கிலாந்து தொடருக்கு மட்டும்),ராஸ்ட்ன் சேஸ், செல்டன் கொட்ரேல்,டோமினிக் டிரேக்ஸ்,சாய் ஹோப்,அகேல் ஹூசைன்,ஜேசன் ஹோல்டர்,பிராண்டன் கிங்,கையில் மேயர்ஸ்,போவேல்,ரோமரியோ சிஃப்பர்ட்,ஓடியன் ஸ்மித்,ஹைடன் வால்ஸ் ஜூனியர். இந்த அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Story first published: Saturday, January 1, 2022, 19:37 [IST]
Other articles published on Jan 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+