ரிஷப் பண்ட்டா? அவரை அவர் போக்கில் விட்டுங்க… அப்ப தான் விளையாடுவாரு.. யாரு சொல்றது?
லண்டன்:இளம்வீரர் ரிஷப் பண்ட்டை அவர் போக்கில் விட்டுவிட்டால் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனிக்கு பதில் என்ற அடையாளத்துடன் வந்து, 2 போட்டிகளில் களமிறங்கிய ரிஷப் பன்ட் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனால், நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதற்கு எல்லாம் தமது பேட்டால் பதில் சொல்லிவிட்டார்.
அதனை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அழகாக பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது:21 வயதான ரிஷப் பன்ட் உலகக் கோப்பையில் கட்டாயம் ஆட வேண்டும்.
விளையாட விடுங்கள்
17 பந்தில் அரைசதம்... அவர் ஏன் இந்தியாவில் விமர்சிக்கப்பட்டார் என்றே தெரியவில்லை. அவரை அவர் வழியில் விளையாட விடுங்கள் என்று வாகன் கூறியுள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு எதிர்மறையான கருத்துகளும் பதிவிடப்பட்டுள்ளன.
உலக கோப்பை முயற்சி
இதற்கு ஒரு ரசிகர் 'கூறியிருப்பதாவது: 2 இன்னிங்ஸ் இதுபோல அருமையாக ஆடட்டும், அப்போது உலக கோப்பைக்கு நுழைய முயற்சிக்கலாம் என்று கூறியிருக்கிறார். அதற்கு வாகனும் பதில் அளித்திருக்கிறார். இருக்கலாம்.. ஆனால் அவர் இங்கிலாந்தில் ஆட தகுதியானவர் என்றார்.

வானவேடிக்கை
டெல்லி அணிக்காக களமிறங்கிய பன்ட் அதிரடியாக அரைசதம் அடித்து வான வேடிக்கை நிகழ்த்தினார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 27 பந்தில் 78 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும்.

ரன்கள் குவிப்பு
பன்ட்டின் அதிரடியால் டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ரன் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை அணி 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. யுவராஜ் மட்டும் அதிரடியாக ஆடி 35 பந்தில் 53 ரன் குவித்தார்.


Click it and Unblock the Notifications