For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொடரும் சர்ச்சை.. இந்திய அம்பயரை டிஸ்மிஸ் செய்த ஐசிசி..! தர்மசேனா நிலைமையை பார்த்தீங்களா?

Recommended Video

Umpire S.Ravi | இந்திய அம்பயரை டிஸ்மிஸ் செய்த ஐசிசி-வீடியோ

துபாய்: 2019 - 20ம் ஆண்டுக்கான கள நடுவர் பட்டியலில் இருந்து இந்திய நடுவர் ரவியை நீக்கி ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து உலக கோப்பை பைனலில் நடுவர் பணியை மேற்கொண்ட இயான் கோல்டு அத்துடன் ஓய்வு பெற்றார். அதனால் அவரையும், எந்தவொரு அறிவிப்பும் இன்றி இந்தியாவை சேர்ந்த நடுவரான ரவி சுந்தரம் என்பவரையும் ஐசிசி கள நடுவர்கள் குழுவில் இருந்து நீக்கியுள்ளது.

2019-20 ம் ஆண்டுகளின் போட்டிகளுக்கு மைக்கேல் கெளப், ஜோயல் வில்சன் ஆகிய இருவரும் சிறப்பு நடுவர்கள் குழுவில் புதிதாக இணைந்துள்ளனர். மைக்கேல் கௌப் 59 ஒருநாள் போட்டிகள், 9 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 14 டி20 போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார்.

ஜோயல் வில்சன்

ஜோயல் வில்சன்

அதேபோல, ஜோயல் வில்சன் 13 டெஸ்ட், 63 ஒருநாள் போட்டிகள், 26 டி20 போட்டிகளில் நடுவராக செயல்பட்டு உள்ளார். இந்த இரு சிறப்பு நடுவர்களை சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ரஞ்சன் மடுகல்லே, டேவிட் பூன், ஐசிசி பொதுமேலாளர் ஜெஃப் ஆலர்டைஸ் ஆகியோர் உள்ளடக்கிய குழு தேர்வு செய்தது.

 தர்மசேனாவின் நிலை

தர்மசேனாவின் நிலை

உலக கோப்பை பைனலில் நியூசிலாந்துக்கு எதிராக, 6 ரன்கள் கொடுத்து சர்ச்சைக்கு வித்திட்ட இலங்கையின் குமார் தர்மசேனா எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து சிறப்பு நடுவர் குழுவில் நீடிக்கிறார். எஸ்.ரவியை நீக்கியதற்கான எந்த காரணங்களையும் ஐசிசி கூறவில்லை என்றாலும், சர்ச்சைகள் இருந்து வந்தன.

தொடர்ந்த சர்ச்சைகள்

தொடர்ந்த சர்ச்சைகள்

இலங்கை அணிக்கு இங்கிலாந்து பயணம் மேற்கொண்ட தொடரில் பல நோ பால்களை இவர் பார்க்கவே இல்லை என்ற புகார்கள் எழுந்தன. ஐபிஎல் கிரிக்கெட்டில் மலிங்காவின் நோ பாலை பார்க்காமல் விட்டது பெரிய சர்ச்சைகளை கிளப்பியது. கேப்டன் கோலி ஒரு கட்டத்தில் முட்டாள்தனமானது என்று விமர்சித்திருந்தார்.

இந்தியர்கள் இல்லை

இந்தியர்கள் இல்லை

2015ல் உயர்மட்ட குழுவில் சேர்க்கப்பட்ட இந்திய நடுவர் ரவி குழுவிலிருந்து நீக்கப்பட்டு விட்டார். தற்போடு ஐசிசி உயர்மட்ட நடுவர் குழுவில் ஒரு இந்திய நடுவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 31, 2019, 12:50 [IST]
Other articles published on Jul 31, 2019
English summary
No indian umpires in ICC panel list.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+