Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த மும்பை வீரருக்கு சாலை விபத்தா? இணையத்தில் வெளியான ஷாக்கிங் புகைப்படங்கள்.. உண்மை என்ன?

அபுதாபி: வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த மூத்த வீரர் கைரன் பொல்லார்ட் சாலை விபத்தில் பலியாகிவிட்டதாக பொய்யான தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

கொரோனாவிற்கு பின் கிரிக்கெட் உலகம் மிகவும் பிசியாக உள்ளது. உலகம் முழுக்க பல நாடுகளில் லீக் ஆட்டங்கள் நடந்து வருகிறது.

முக்கியமாக அபுதாபியில் தற்போது டி 10 லீக் ஆட்டங்கள் நடந்து வருகிறது. இந்த லீக் தொடரில் மேற்கு இந்திய தீவுகளை சேர்ந்த வீரர்கள் பலர் ஆடி வருகிறார்கள்.

லீக் ஆட்டம்

லீக் ஆட்டம்

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த மூத்த வீரர் கைரன் பொல்லார்ட் சாலை விபத்தில் பலியாகிவிட்டதாக பொய்யான தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இது யூ டியூபில் நேற்று வீடியோ ஒன்று வெளியானது. அதில் பொல்லார்டுக்கு சாலை விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.

சாலை விபத்து

சாலை விபத்து

காரில் செல்லும் போது விபத்து ஏற்பட்டதாக அந்த வீடியோவில் கூறப்பட்டு இருந்தது. அதோடு இவரின் முகத்தில் காயம் ஏற்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. இவர் மருத்துவமனையில் படுத்து இருக்கும் புகைப்படங்களும் கூட இணையத்தில் வேகமாக பரவியது.

உண்மை

உண்மை

யூ டியூப் மட்டுமின்றி டிவிட்டர், பேஸ்புக்கிலும் இது வைரலானது. இந்த நிலையில் இது தொடர்பான உண்மை விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி பொல்லார்டுக்கு எந்த விதமான காயமும் ஏற்படவில்லை. அவருக்கு விபத்து எதுவும் ஏற்படவில்லை. அவர் தற்போது அபுதாபியில் டி 10 லீகில் ஆடி வருகிறார்.

பொய்

பொய்

இணையத்தில் வெளியான இந்த தகவல் முழுக்க முழுக்க பொய்யானது. இதை சில யூ டியூப் சேனல்கள் வேண்டுமென்றே தவறாக பரப்பி உள்ளது. யூ டியூப் வியூஸ் பெற வேண்டும் என்பதற்காக இந்த பொய்யான தகவலை,வதந்தியை பரப்பி இருக்கிறார்கள், என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Story first published: Sunday, January 31, 2021, 10:03 [IST]
Other articles published on Jan 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+