Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தரமான சிறப்பான சம்பவங்களுடன் ஒருநாள் போட்டி துவங்க இருக்கு... ராகுல், சூர்யா விளையாடுவார்களா?

புனே : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் புனேவில் துவங்கவுள்ளது.

இந்த போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதில் பிரசித், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. கேஎல் ராகுலும் இடம்பெற மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

ஒருநாள் தொடர் துவக்கம்

ஒருநாள் தொடர் துவக்கம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட், டி20 தொடர்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இதையடுத்து இன்று முதல் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் துவங்கவுள்ளது. இந்த போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு துவங்கி நடைபெறவுள்ளது.

அணியில் மாற்றங்கள்

அணியில் மாற்றங்கள்

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதில் ஒருசில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த போட்டியில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் விளையாடவுள்ளதாக கேப்டன் விராட் கோலி நேற்றைய தினம் அறிவித்துள்ளார்.

ரிஷப் இடம்பிடிப்பு

ரிஷப் இடம்பிடிப்பு

இந்நிலையில் இந்த போட்டியில் துவக்க வீரர் கேஎல் ராகுல் இடம்பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த இரண்டு தொடர்களிலும் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்த ரிஷப் பந்த், இந்த போட்டிகளிலும் விக்கெட் கீப்பிங்கை மேற்கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. அவர் மீண்டும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில் அவர் தனது 5வது இடத்தில் விளையாடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிரசித் விளையாட மாட்டார்

பிரசித் விளையாட மாட்டார்

இதனிடையே ஷ்ரேயாஸ் ஐயர் 4வது இடத்திலும் விராட் கோலி 3வது இடத்திலும் விளையாடவுள்ளதாகவும், கடந்த டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் விளையாட மாட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பிரசித் இந்த போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம்

வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம்

ஆயினும் க்ருணால் பாண்டியா இந்த போட்டியில் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பௌலிங்கை பொருத்தவரை புவனேஸ்வர் குமார், ஷர்துல் தாக்கூர் மற்றும் நடராஜன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஸ்பின்னர் சஹல் ஆகியோர் இந்த போட்டியில் விளையாடவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, March 23, 2021, 10:32 [IST]
Other articles published on Mar 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+