Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிராஜ், ஆர்ஸ்தீப் சிங் இல்லை.. ஆஸி. தொடருக்கு இந்த வேகப்பந்துவீச்சாளர் தான் தேவை- EX கோச் கருத்து

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டும் என்றால் பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு தான் மிகவும் முக்கியம். ஏனென்றால் எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினால், மட்டுமே உங்களால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற முடியும்.

இல்லையென்றால் போட்டி சமனில் தான் முடியும். இதனால் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்கள் கையில்தான் வெற்றி இருக்கிறது. இந்த சூழலில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் அதிகபட்சம் ஏழு டெஸ்ட் போட்டிக்கு வெற்றி பெற வேண்டும் என்று கூறப்படுகிறது.

duleep trophy 2024 mohammed siraj arshdeep singh


இதில் சொந்த மண்ணில் அடுத்த இரண்டு மாதத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் விளையாடப்படுகிறது. இதனை அடுத்து நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதனால் இந்தியா ஆஸ்திரேலியா தொடர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டிலும் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது. இதனால் ஹாட்ரிக் வெற்றிய பெற வேண்டிய முனைப்பில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு செல்லும்.
இந்த சூழலில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவை வீழ்த்த வேண்டிய உத்வேகத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய வீரர்கள் யார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்பரே பேசியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் ஆஸ்திரேலியாவில் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும்.

சில ஆடுகளத்தில் பவுன்ஸ் இருக்கும். சில ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடும். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் கூக்குபரா பந்து மிகவும் வித்தியாசமான முறையில் செயல்படும். கூக்குரா பந்து 30 ஓவர் வரை புதிதாக இருக்கும். அப்போதுதான் உங்களால் விக்கெட் எடுக்க முடியும். 35 ஓவர்களை தாண்டி விட்டால் விக்கெட்டுகள் எடுப்பது மிகவும் கடினம்.

அப்போது உங்களுக்கு விக்கெட் எடுக்கக்கூடிய பந்துவீச்சாளர்கள் மட்டும்தான் தேவை. பழைய பந்திலும் விக்கெட் எடுக்கக்கூடிய திறமை உடைய வீரர்கள் உங்கள் அணியின் மிகவும் முக்கியமான நபராக மாறிவிடுவார்கள். இந்த சூழலில் பந்தின் பவுன்ஸ் என்பது விக்கெட்டுகளை எடுக்க மிகவும் முக்கியமானதாக இருக்கும். அதனால் தான் நான் மூன்றாவது பந்துவீச்சாளராக பிரசித் கிருஷ்ணாவை எப்போதுமே சேர்ப்பேன்.

பிரசித் கிருஷ்ணா தற்போது தான் காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார். அவர் துலீப் கோப்பையில் சேர்க்கப்பட்டார். அந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டால் நிச்சயமாக இந்திய அணியில் மூன்றாவது வேகப்பந்துச்சாளராக நான் அவரை தான் தேர்வு செய்வேன். ஏனென்றால் 30 35 ஓவர் க்கு பிறகு பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளம் மாறிவிடும்.

அப்போது பவுன்சை வைத்து விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய ஒரே பவுலர் என்றால் அது பிரசித் கிருஷ்ணா தான். எனவே முகமது சமி, பும்ரா, பிரசித் கிருஷ்ணா போன்ற மூன்று வேகப்பந்துவீச்சாளர் வைத்து இந்தியா விளையாட வேண்டும் என பராஸ் மாம்பரே கூறி இருக்கிறார். இந்த சூழலில் கம்பீர் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தேவை என கூறி இருக்கிறார். இதனால் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தற்போது தயாராக வருகிறார்.

Story first published: Thursday, September 5, 2024, 18:13 [IST]
Other articles published on Sep 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+