உங்கள கேட்கணும்னு அவசியம் எல்லாம் கிடையாது..! கோலி மூக்கை உடைத்த பிசிசிஐ... காரணம் இதுதான்..!
Recommended Video
மும்பை: அணியின் புதிய பயிற்சியாளர் குறித்து கோலியிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பையுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்கள் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடர் நடக்க உள்ளதால் மேலும் 45 நாட்களுக்கு அவர்களின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. அதற்கான அறிவிப்பையும் பிசிசிஐ வெளியிட்டது.
புதிய பயிற்சியாளரை நியமிக்க பல ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விண்ணப்பங்கள் மூலம் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ கூறியிருந்தது. அதற்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான கெடும் ஜூலை 30ம் தேதியுடன் முடிந்தது.

கருத்து சொன்ன கோலி
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேப்டன் கோலி, ரவி சாஸ்திரியிடம் நல்ல நட்புறவுடன் இருக்கின்றோம். தனிப்பட்ட முறையில் அவர் பயிற்சியாளராக மீண்டும் வந்தால் மகிழ்ச்சி என்று கூறியிருந்தார்.

அடிப்படை தகுதி
அவரின் இந்த விருப்பம் பற்றி பிசிசிஐ தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பயிற்சியாளர் தேர்வு குழு உறுப்பினர் அன்சுமன் கெய்க்வாட் கூறியதாவது: கோலி தனது விருப்பத்தை கூறியிருக்கிறார். ஆனால் பயிற்சியாளர் தேர்விற்கு சில அடிப்படை தகுதிகளை வைத்திருக்கிறோம். அதில் மீண்டும் ரவிசாஸ்திரி தேர்வானால் நிச்சயம் அவரை கணக்கில் கொள்வோம்.

தேடி வருகிறோம்
சரியான திட்டமிடல், அணி மேலாண்மை, தொழில்நுட்ப நிபுணத்துவம், நல்ல உடல் தகுதி ஆகியவற்றை கொண்ட சிறந்த பயிற்சியாளரை தேடி வருகிறோம். யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து கோலியிடம் ஆலோசனை செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றார்.

விரைவில் அறிவிப்பு
கபில்தேவ் தலைமையிலான பயிற்சியாளர் தேர்வுக் குழுவில் அன்சுமன் கெய்க்வாட் மற்றும் மகளிர் அணி முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இப்பதவிகளுக்கான விண்ணப்பங்களை ஆராய்ந்து இவர்கள் விரைவில் பயிற்சியாளர்கள் யார் என்பதை வெளியிட உள்ளனர்.


Click it and Unblock the Notifications