IND vs SA : இன்னும் 6 மாதம் இருக்கு.. யாரும் குழம்ப தேவையில்லை.. புதிய புதிரை போட்ட ஜெய் ஷா!
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 6 மாதங்கள் இருப்பதால், இந்திய அணி கேப்டன் யார் என்ற விவாதம் தேவையில்லை என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு பின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணிக்காக ஒரு டி20 போட்டியில் கூட களமிறங்கவில்லை. மாறாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி உருவாக்கப்பட்டது.

இதனிடையே உலகக்கோப்பை தொடரின் போது ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகிய ஹர்திக் பாண்டியா என்சிஏ-வில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதேபோல் என்சிஏ தரப்பில் அவருக்கு சிகிச்சையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக கேப்டன்சி மேற்கொண்ட அவர், தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் டி20 உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளது.
இந்த டி20 தொடருக்கு இந்திய அணிக்கு யார் கேப்டனாக செயல்படுவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான மினி ஏலத்தின் போது பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேசுகையில், ஜனவரியில் நடக்கவுள்ள ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்குள் ஹர்திக் பாண்டியா தயாராகி விடுவார். அவர் முழுக்க முழுக்க என்சிஏவில் தான் உள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளது. அதற்குள் நாம் எந்த முடிவையும் எடுக்க தேவையில்லை. அதற்கு ஆஃப்கானிஸ்தான் டி20 தொடர், ஐபிஎல் தொடர் உள்ளிட்டவை இருக்கிறது. இதனால் ரோகித் சர்மா விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்க தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
Story first published: Sunday, December 10, 2023, 15:31 [IST]
Other articles published on Dec 10, 2023


Click it and Unblock the Notifications