Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'நைட் ரவுண்ட்ஸ்'-கிரிக்கெட் வீரர்களுக்குத் தடை!

Harbhajan Singh and Amritha Rao
அகமதாபாத்: பாதுகாப்பு கருதி, இரவு நேரங்களில் கிரிக்கெட் வீரர்கள் வெளியே செல்லக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

அகமதாபாத்தில் இந்தியா, இலங்க இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது.

இரு அணி வீரர்களும் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியினருக்கு மிரட்டல் இருப்பதாக கொழும்பிலிருந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தினர், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குத் தகவல் கொடுத்ததால் அந்த அணியினருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியமும் தனியாக சில தடைகளை விதித்துள்ளது.

பாதுகாப்பு கருதி வீரர்கள் யாரும் இரவு நேரங்களில் வெளியே போகக் கூடாது என்பது அதில் ஒன்று.

இது குறித்து வாரியத்தின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் சுக்லா கூறும்போது வீரர்கள் பாதுகாப்பு இல்லாமல் அவர்களாகவே வெளியே செல்வது கவலை அளிக்கிறது. பாதுகாப்பு காரணமாக வீரர்கள் இரவில் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றார்.

சமீபத்தில் மொஹாலியில் நடந்த ஒரு நாள் போட்டிக்காக அங்கு சென்றிருந்த இந்திய அணியின் கேப்டன் டோணி, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் பாதுகாப்பு எச்சரிக்கைகளை மீறி ஹோட்டலை விட்டு இரவில் வெளியே சென்றதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்தே இந்த எச்சரிக்கையை கிரிக்கெட் வாரியம் பிறப்பித்தது.

இருப்பினும் நேற்று இரவு, பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் பாதுகாப்பு இல்லாமல் ஹோட்டல் அறையை விட்டு வெளியே சென்றதாக செய்திகள் வெளியானது.

இருப்பினும் இதை குஜராத் காவல்துறை மறுத்துள்ளது. இதுகுறித்து அகமதாபாத் இணை ஆணையர் சதீஷ் சர்மா கூறுகையில், ஹர்பஜன் சிங் பாதுகாப்பு விதியை மீறவில்லை. சரியான பாதுகாப்புடன்தான் அவர் வெளியே சென்றார் என்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:32 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+