Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போச்சு.. விடாமல் துரத்தும் 36.. இனி யாராலும் இந்தியாவை காப்பாற்ற முடியாது.. இவரே இப்படி சொல்லிட்டாரே

சிட்னி: இந்தியா இனி மீண்டு வந்து ஆடுவது மிகவும் கடினம், இந்தியா அவ்வளவு எளிதாக இனி நடக்கும் டெஸ்ட் போட்டிகளை வெல்ல முடியாது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமாக ஆடி படுதோல்வி அடைந்தது.முதல் இன்னிங்சில் 244 எடுத்த இந்திய அணி அடுத்த இன்னிங்சில் வெறும் 36 ரன்கள் எடுத்து மிக மோசமான ஆட்டம் ஆடியது.

முதல் இன்னிங்சில் 191 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி அடுத்த இன்னிங்சில் 2 விக்கெட்டில் 93 ரன்கள் எடுத்து வென்றது..

இந்திய அணி

இந்திய அணி

இந்த நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில் , இந்திய அணி முதல் டெஸ்டில் மிக மோசமாக தோல்வி அடைந்தது அந்த அணிக்கு பின்னடைவாக இருக்கும். மன ரீதியாக இந்திய அணியை இது பாதித்து இருக்கும். இதில் இருந்து இந்தியா மீள்வது கடினம்.

ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங்

இந்திய அணிக்கு இது மிகப்பெரிய வலியை, காயத்தை கொடுத்து இருக்கும். 36 ரன்களில் அவுட் ஆவது என்பது வலி மிகுந்த விஷயம். இந்திய அணி இந்த தொடரில் கிளீன் வாஷ் அவுட் ஆக கூட வாய்ப்பு இருக்கிறது.

மீண்டும் வருமா

மீண்டும் வருமா

இந்தியா இனி மீண்டு வந்து ஆடுவது மிகவும் கடினம். இந்தியா அவ்வளவு எளிதாக இனி நடக்கும் டெஸ்ட் போட்டிகளை வெல்ல முடியாது. இந்திய அணியில் வேறு தற்போது கோலி இல்லை.

 கோலி இல்லை

கோலி இல்லை

கோலி இல்லாமல் மீதம் இருக்கும் வீரர்கள் ஆடி வெற்றிபெறுவது கடினம். இந்திய அணியில் தற்போது அணியை காப்பாற்ற கூடிய வீரர்கள் என்று யாருமே இல்லை. இந்தியாவை காப்பாற்ற போகும் வீரர் என்று யாரையும் கூற முடியாது, என்று ரிக்கி பாண்டிங் குறிப்பிட்டு இருக்கிறார்.

Story first published: Tuesday, December 22, 2020, 9:26 [IST]
Other articles published on Dec 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+