
ராணுவம் பரிசீலனை
அதன் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தம்மை சேர்க்க வேண்டாம் என்று அவர் கூறியிருந்தார். இதையடுத்து, தோனியின் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு அதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவ தரப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோனிக்கு அனுமதி
அதன்படி ராணுவ பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற, ராணுவ தளபதி பிபின் ராவத், தோனிக்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆனால், பயிற்சியின் போது சில முக்கிய கட்டுப்பாடுகளையும் அவர் விதித்திருக்கிறார்.

பாதுகாப்பு நடவடிக்கை
அவற்றில் மிக முக்கியமானது ஒன்று இருக்கிறது. அதாவது தோனிக்கு எந்தவித ராணுவ நடவடிக்கையில் பங்குபெற அனுமதி வழங்கப்படவில்லை. தோனியின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கவுரவ லெப்டினன்ட் கேனல்
அதாவது, ராணுவ பயிற்சியில் தோனி கலந்துகொள்ள முடியுமே தவிர, ராணுவ சிறப்பு ஆபரேஷன்களில் அவர் பங்கேற்க முடியாது.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தோனி பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார். தோனிக்கு 2011ம் ஆண்டு ராணுவத்தின் கவுரவ லெப்டினன்ட் கேனல் பதவி வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











