Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவருக்கு அதிகப்படியான நெருக்கடி இருக்காது... சமாளிச்சுப்பாரு... யாரப்பத்தி சொல்றாரு கவாஸ்கர்!

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பகலிரவு போட்டியுடன் கூடிய 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17ம் தேதி முதல் துவங்கவுள்ளது.

முதலில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்றுவிட்டு கேப்டன் விராட் கோலி தனது குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பவுள்ளார்.

அடுத்த 3 போட்டிகளில் அஜிங்க்யா ரஹானே கேப்டனாக செயல்படவுள்ளார். இந்நிலையில் அவர் எந்த நெருக்கடியும் இன்றி இதை எதிர்கொள்வார் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

4 போட்டிகள்... டெஸ்ட் தொடர்

4 போட்டிகள்... டெஸ்ட் தொடர்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது. வரும் 17ம் தேதி அடிலெய்டில் பகலிரவு போட்டியுடன் இந்த தொடர் துவங்கவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் கேப்டன் விராட் கோலி அதையடுத்து தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்புகிறார்.

3 போட்டிகளின் கேப்டன்

3 போட்டிகளின் கேப்டன்

அவருக்கு பதிலாக துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே அடுத்த 3 போட்டிகளில் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்நிலையில் அவருக்கு இந்த போட்டிகளை சமாளிக்க அதிகப்படியான நெருக்கடி இருக்காது என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ரஹானே வெற்றி

ரஹானே வெற்றி

இந்த போட்டிகளில் ஸ்டாண்ட் -இன் கேப்டனாக மட்டுமே ரஹானே செயல்படவுள்ளதால் அவருக்கு நெருக்கடி அதிகமாக இருக்காது என்று கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தர்மசாலாவில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்று இரண்டிலும் அவர் வெற்றி பெற்றுள்ளதையும் கவாஸ்கர் சுட்டிக் காட்டியுள்ளார்.

புஜாரா குறித்து கவாஸ்கர் பாராட்டு

புஜாரா குறித்து கவாஸ்கர் பாராட்டு

அதனால் தன்னுடைய பொறுப்பை சரியாக அவர் மேற்கொண்டு விளையாடுவார் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் புஜாராவையும் சிறப்பாக பயன்படுத்தி விளையாட வைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் புஜாரா டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் அவர் மனதளவில் மிகவும் வலிமையானவர் என்றும் சிறப்பாக போட்டிகளை எதிர்கொள்வார் என்றும் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, December 14, 2020, 19:48 [IST]
Other articles published on Dec 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+