
ஆரோக்கியமில்லை
இதுகுறித்து டிராவிட் கூறியதாவது: எங்களுக்கு எகிறி பந்துக்கு ஏற்ற பிட்ச் வேண்டும் என்று கேட்கவில்லை. ஆனால் 2 நாட்களில் போட்டி முடியும்வகையிலான பிட்ச் வேண்டாம். சாமானியமாக பந்து வீசும் பவுலர்களும் 5 விக்கெட்டுகளை வீழ்த்த முடியுமெனில், அது ஆரோக்கியமான போக்கு கிடையாது.

நேரம் வேஸ்ட்
இதுபோன்ற பிட்சுகள், பணம், மனித சக்தி, காலத்தை விரையம் செய்யும் அவ்வளவே தவிர இதனால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. இவ்வாறு டிராவிட் கூறியுள்ளார். ஏற்கனவே, இந்தியா-தென் ஆப்பிரிக்கா தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளிலுமே பவுலர்கல் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் டிராவிட் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

அஸ்வின்
இதனிடையே, நாக்பூர் டெஸ்டின் 2வது நாள் இறுதியில் இந்திய சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் விழுவது இது 2வது முறை மட்டுமே.

நான் புகார் சொல்லவில்லை
2004ம் ஆண்டு மும்பையில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியின்போது, ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. நான் ஜோகனஸ்பர்க்கில் விளையாடும்போது பிட்ச் ஒத்துழைக்கவில்லை என புகார் கூறவில்லை. எனவே இப்போதும் நாக்பூர் பிட்சை நான் குறை கூறப்போவதில்லை.

இங்கிலாந்தில் என்னவாம்
ஸ்விங்க், வேகம் மற்றும் எகிறும் பந்துகள் ஆகியவை சேர்ந்து இங்கிலாந்தின் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தி்ல் இரண்டே நாளில் டெஸ்ட் போட்டிகளை முடித்து வைத்துள்ளது. அதை நீங்கள் எப்படி அழைப்பீர்கள். ஏன் இந்தியா பிட்ச்சை மட்டும் குறை சொல்ல வேண்டும்.

நல்ல பிட்ச்
நாக்பூரில் பந்து ஸ்பின்னாகி, எகிறி வருகிறது. இது ஒரு நல்ல பிட்சுக்கு அறிகுறிதானே. பிறகு ஏன் குறை சொல்ல வேண்டும். சுழன்று வரும் பந்தை எதிர்கொள்வது பேட்ஸ்மேனில் திறமையின்மீது அடங்கியுள்ளது. இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











