Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி, ரோகித் இல்லை.. இவர் தான் ஆஸ்திரேலியாவுக்கு எமனாக இருக்க போகிறார்- பாண்டிங் எச்சரிக்கை

மும்பை : 2024 ஆம் ஆண்டிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் தொடராக நடக்கப்போவது பார்டர் கவாஸ்கர் தொடர் தான். இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்த தொடரை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் கைப்பற்றும் உத்வேகத்துடன் ரோகித் சர்மா தலைமையில் உள்ள இந்திய அணி இருக்கிறது.

கடந்த இரண்டு முறையை சொந்த மண்ணில் தோல்வியை தழுவியதால் இம்முறை எப்படியாவது வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவின் மானத்தை காப்பாற்ற வேண்டும் என்ற பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இருக்கிறது.

india vs bangladesh ind vs ban cricket virat kohli


நவம்பர் மாதம் தான் இந்த தொடர் நடைபெறுகிறது. எனினும் இந்த தொடருக்கு தயாராகும் விதமாக கம்மின்ஸ் தற்போது இருந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக வேறு எந்த ஒரு கிரிக்கெட்டு தொடரிலும் தம் பங்கேற்க போவதில்லை என்று கம்மின்ஸ் கூறியிருக்கிறார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் எப்போதும் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

இந்தியாவின் வெற்றிக்கு விராட் கோலியின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இதேபோன்று ரோகித் சர்மாவும் தொடக்க வீரராக தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். எனினும் இவர்கள் இருவரை விட பண்ட் தான் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிக்கி பாண்டிங், பண்ட் விளையாடிய விதத்தை நாம் அனைவரும் பார்த்து இருப்போம்.ஸ்டம்ப்க்கு பின்னால் நின்று அவர் உரையாடலை கேட்டிருப்போம். ரிஷப் பன்ட் போன்ற ஒரு வீரர் தம் சுற்றியுள்ள வீரர்களையும் தன்னை போல் மாற்றி விடுவார்.

ஸ்டம்ப் பின்னால் நின்று மற்ற வீரர்களுக்கு ஊக்கம் கொடுப்பார். கிரிக்கெட் என்றால் ரிஷப் பந்துக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு மேட்ச் வின்னர். ரிஷப் பன்ட் ஒன்றும் அதிரடியாக ஆடிவிட்டு கொஞ்சம் ரன்கள் அடித்தால் போதும் என்று நினைத்து வரக்கூடிய வீரர் கிடையாது. அவர் ஏற்கனவே ஐந்து டெஸ்ட் சாதனங்களை அடித்துவிட்டார். இதுவரை 90 ரன்களுக்கு மேல் ஒன்பது முறை அடித்து விட்டார்.

தோனி பல டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சில சதங்கள் தான் அடித்திருக்கிறார். ஆனால் இவர் இப்போது பல சதங்களை அடித்து விட்டார். ஒரு காட்டு தனமான கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் என்று பாண்டிங் பாராட்டியுள்ளார். கடைசியாக 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

அதன் பிறகு அவருக்கு கார் விபத்து ஏற்பட்டது. இதை அடுத்து கடந்த 15 மாதங்களுக்கு மேலாக டெஸ்ட் போட்டிகளில் பண்ட், விளையாடாத நிலையில் தற்போது வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பண்ட் திரும்பி இருக்கிறார். ஏற்கனவே துலீப் கோப்பை தொடரில் ரிஷப் பண்ட் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனால் வங்கதேஷ்க்கு எதிரான முதல் போட்டியில் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி மீண்டும் இந்தியாவின் பிரதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பண்டின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. பண்ட் ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற கடினமான ஆடுகளங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்து அசத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, September 11, 2024, 19:37 [IST]
Other articles published on Sep 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+