பயமா.. எனக்கா.. என் அகராதியிலேயே அந்த வார்த்தைக்கு இடமில்லை.. திடீரென டென்ஷனான கவுதம் கம்பீர்!
ஹாமில்டன்: என்னுடைய அகராதியில் பயம் என்ற வார்த்தையே கிடையாது என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் முதல்முறையாக நியூசிலாந்துக்கு பயணித்து விளையாடி இருப்பதாக கூறிய கம்பீர், அவர் தயாராக ஒருநாள் மட்டுமே இருந்தது என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்தது. இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றுள்ளது.

இதன் மூலமாக இந்திய அணி டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணி ஒயிட் வாஷ் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, நியூசிலாந்து அணி கடைசி 2 போட்டிகளில் மாஸ் கம்பேக் கொடுத்து அபார வெற்றியை பெற்றுள்ளது. இதுகுறித்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசுகையில், என்னுடைய அகராதியில் பயம் என்ற வார்த்தையே கிடையாது.
ஒரு தொழில்முறை பயிற்சியாளராக பயம் இருக்கவே கூடாது. அதேபோல் தோல்விக்கு காரணங்கள் சொல்ல கூடாது. மனதளவில் அயற்சியாக இருப்பது உண்மை தான். அதனை சமாளிக்க கூடிய வலிமை எனக்கு உள்ளது. இன்னும் கூட கூடுதல் அழுத்தத்தை என்னால் எதிர்கொள்ள முடியும். இந்த டி20 தொடரை பொறுத்தவரை இந்திய வீரர்களின் மிகச்சிறப்பாக விளையாட முயற்சித்தார்கள்.
ஏனென்றால் நியூசிலாந்து வந்த பின் ஒருநாளில் டி20 தொடருக்கு தயாராக வேண்டியதாக இருந்தது. வானிலை, தட்ப வெப்ப சூழல் என்று அனைத்து வித்தியாசமானது. அதுவும் நியூசிலாந்து போன்ற்அ வலிமையான அணிக்கு எதிராக விளையாட கூடுதலாக தயாராக வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்திய டி20 வீரர்களில் பெரும்பாலானோர் முதல்முறையாக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் வருகிறார்கள்.
இந்த டி20 தொடரை வென்றதோடு இன்னொரு முக்கியமான விஷயம் உள்ளது. முதல் 3 போட்டிகளில் எவ்வளவு கனிவு காட்டாமல் இந்திய வீரர்கள் விளையாடினார்கள். அதுவும் 220 ரன்களை சேஸிங் செய்த போது, இளம் வீரர்கள் அசத்திவிட்டார்கள் என்றே சொல்லலாம். முதல் போட்டியை வெல்வதற்கு முன் ஒரேயொரு பயிற்சி நாள் மட்டுமே இருந்தது. அதனால் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணி அசத்திவிட்டது என்று பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications
