For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கில் , ஜெய்ஸ்வால் இல்லை- 26 வயது இந்திய வீரர் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிப்பார்- கங்குலி கணிப்பு

மும்பை : இந்தியா, வங்கதேசம் அணி இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களும் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.
முகமது ஷமியை தவிர மற்ற சீனியர்கள் அனைவரும் அணிகளில் இருக்கிறார்கள்.

india vs bangladesh ind vs ban cricket virat kohli


இந்த நிலையில் ஜெய்ஸ்வால், கில், சப்ராஸ்கான் போன்ற இளம் வீரர்களும் இந்த தொடரில் விளையாடுகிறார்கள். இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கக்கூடிய இளம் வீரர் யார் என்பது குறித்து கங்குலி கருத்து தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது ரிஷப் பண்ட் தான்.

அவர் விபத்திற்கு பிறகு தற்போது உடனடியாக அணிக்கு திரும்பியதை நினைத்து எனக்கு எந்த ஒரு ஆச்சரியமும் கிடையாது. அவர் நிச்சயம் இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்.இன்னும் சொல்லப்போனால் தொடர்ந்து ரிஷப் பண்ட், இதே மாதிரி விளையாடினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல் டைம் சிறந்த வீரராக ரிஷப் பந்த் வழங்குவார்.

என்னைப் பொறுத்தவரை ரிஷப் பண்ட் ஒரு நாள் மட்டும் டி20 கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்க வேண்டும். அவருக்கு இருக்கும் திறமை நிச்சயம். இதை போல் சிறப்பாக விளையாடுவார். நிச்சயம் அவர் ஒருநாள் டி 20 கிரிக்கெட்டிலும் சிறந்த வீரராக திகழ்வார் என்று நம்புகிறேன் என கங்குலி கூறியுள்ளார்.கிட்டத்தட்ட 21 மாதங்களுக்கு பிறகு ரிஷப் பண்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் திரும்பி இருக்கிறார்.

இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட், 2271 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஐந்து சதங்கள் அடங்கும். அவருடைய சராசரி 43 என்ற அளவில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய மண்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றிருக்கிறார்.

இதுவரை 76 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 1209 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 127 சராசரி வெறும் 23 ஆகும். இதே போன்று 31 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாட பண்ட், 871 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 33 ஆகும்.இதில் ஒரு சதம் அடங்கும்.

Story first published: Monday, September 9, 2024, 20:01 [IST]
Other articles published on Sep 9, 2024
English summary
No Shubman gill or Yashasvi Jaiswal- 26 Year old cricketer is the all time playing xi test கில் , ஜெய்ஸ்வால் இல்லை- 26 வயது இந்திய வீரர் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிப்பார்- கங்குலி கணிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+