Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் 2 சுழற்பந்துவீச்சாளர்கள் அதிரடி நீக்கம்.. வாய்ப்பு கொடுக்காததற்கு காரணம் என்ன?

டாக்கா : இந்திய வங்கதேச அணிகள் இடையிலான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் வரும் நான்காம் தேதி தொடங்குகிறது.

நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட ரோகித் சர்மா விராட் கோலி கேஎல் ராகுல் முகமது சமி ஆகியோர் வங்கதேச தொடருக்கு திரும்பி இருக்கிறார்கள்.

எனினும் இந்திய அணி 2 தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளர்களை இந்த தொடரில் தேர்வு செய்யாமல் விட்டிருப்பது ரசிகர்களுடைய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சுழற்பந்துவீச்சு

சுழற்பந்துவீச்சு

இந்திய அணியில் தற்போது அஸ்வினுக்கு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வாய்ப்பு கிடைப்பதில்லை.ஜடேஜா காயம் காரணமாக வங்கதேச தொடரிலிருந்து விலகி இருக்கிறார். எனினும் அக்சர் பட்டேல் இந்திய அணியில் இருந்தாலும் அவர் ஆல்ரவுண்டர் என்ற வரிசையில் வருவார். குல்தீப் யாதவ் மற்றும் சாகல் எப்போதும் இந்திய அணியில் இடம் பெறுவார்கள்.ஆனால் முதல்முறையாக வங்கதேச தொடரில் சுழற் பந்துவீச்சுக்கென தனி வீரர்கள் இல்லாமல் இந்திய அணி களமிறங்குகிறது.

ஆல் ரவுண்டர்கள்

ஆல் ரவுண்டர்கள்

சாஹல் தொடர்ந்து விளையாடி வருகிறார் என்பதற்காக அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கலாம் என வைத்து கொண்டாலும், குல்திப் யாதவ் அணியில் சேர்க்கப்படாதது புரியாத புதிராக இருக்கிறது. தற்போது இந்திய அணியில் அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் ஷாபாஸ் அஹமத் ஆகியோர் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் இந்த மூன்று வீரர்கள் ஆல் ரவுண்டர் என்ற வரிசையில் உள்ளனர். இதன் காரணமாக பேட்டிங் தெரிந்த சுழற் பந்துவீச்சாளர்கள் தான் உலக கோப்பையில் இந்தியா முக்கியத்துவம் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல் முறை

முதல் முறை

இதனால் உலகக்கோப்பை போட்டியில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு என தனி இடம் இல்லாத சூழல் உருவாகி இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சை வலுப்படுத்தும் விதமாக அக்சர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இரண்டு பேருமே பிளேயிங் லெவனில் இடம்பெறுகிறார்கள். இதன் காரணமாக தான் சாகல் மற்றும் குல்தீப் யாதவ்க்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

சுழற்பந்துவீச்சுக்கென தனி வீரர் இல்லாமல் இந்திய அணி ஆசிய மைதானங்களில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும்.

கைக் கொடுக்குமா?

கைக் கொடுக்குமா?

இந்தியாவின் இந்த யுத்தி கை கொடுக்குமா இல்லையா என்பது வங்கதேச தொடரில் தெரிந்து விடும். ஆனால் லெக் ஸ்பின்னர் எப்போதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு தேவை. ஏனென்றால் அவர்கள் ரன்களை விட்டுக் கொடுத்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய வீரர்களாக இருப்பார்கள். சாகலுக்கு வாய்ப்பு இல்லாத இந்த சூழலில் குல்தீப் யாதவையாவது இந்திய அணி பயன்படுத்திருக்கலாம். இது தேர்வு குழு தெரிந்து செய்த தவறா இல்லை புதிய பிளானை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

Story first published: Thursday, December 1, 2022, 23:06 [IST]
Other articles published on Dec 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+