ஏன் இப்படி..? ஒரு தமிழ்நாடு வீரரையாவது ஆட்டத்தில் சேர்த்திருக்கலாம்.. பொங்கிய தமிழக ரசிகர்கள்
சென்னை: ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியில் தமிழகத்தை சேர்ந்த ஒரு வீரர் கூட இடம் பெறாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
இந்தியாவில் 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டி அதே உற்சாகத்துடன் இந்தாண்டும் தொடங்கி இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை அணி பெங்களூரை சாய்த்துவிட்டது.
அந்த போட்டியானது வழக்கத்துக்கு மாறாக பெருத்த உற்சாகத்துடன் தொடங்கியது. டாசில் வென்ற தல தோனியின் சென்னை அணி முதலில் பீல்டிங் செய்தது.

சென்னை வெற்றி
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு ஏற்ப சென்னை அணி, பெங்களூரு அணிக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தனது வெற்றி கணக்கை துவங்கி உள்ளது.

சொந்த மண்
இந்நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை அணியில் தமிழக வீரர்களுக்கு சான்ஸ் கொடுக்கப்படவில்லை. சொந்த மண்ணில் விளையாடும் போது... உள்ளூர் அணி வீரர்களுக்கு வாய்ப்பு தராததால் சென்னை ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

2 வீரர்கள்
இத்தனைக்கும் சென்னை அணியில் முரளி விஜய், ஜெகதீசன் என இரு தமிழக வீரர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவருக்கேனும் விளையாட சான்ஸ் கொடுத்திருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.

வாய்ப்பு அளிக்கவில்லை
ஒரு அணி சொந்த மண்ணில் விளையாடும் அந்த ஊர் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால்.. சென்னை அணிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிவில்லை.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
அண்மையில் கால்பந்து தொடரில் சென்னை சிட்டி முதன் முறையாக கோப்பை வென்றது. அதில் 17 பேர் தமிழக வீரர்கள் இருந்தனர். இதேபோல இல்லா விட்டாலும் ஒரு சில வீரர்களுக்காவது சென்னை அணியில் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications