கொல்கத்தா ஒரு நாள் போட்டி: டிக்கெட் விற்பனை கிடையாது -ரசிகர்கள் ஏமாற்றம்

கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நாளை நான்காவது ஒரு நாள் போட்டியில், இந்தியாவும், இலங்கையும் சந்திக்கவுள்ளன.
இந்த போட்டிக்காக டிக்கெட் விற்பனை கிடையாது என்று பெங்கால் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், முழு டிக்கெட்களும் விற்பனையானால் எங்களுக்கு ரூ. 2.5 கோடி வசூலாகும். வழக்கமாக ஈடன்கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் எந்தப் போட்டியாக இருந்தாலும் புல்லாகி விடும்.
மேலும், 34 மாதங்களுக்குப் பின்னர் கொல்கத்தாவில் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதால் ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
ஆனால் இந்த இலவச டிக்கெட்களே மைதானத்தின் பெரும்பாலான சீட்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால் இந்த முறை டிக்கெட் விற்பனை கிடையாது என்றார்.
கடைசியாக 2007ம் ஆண்டு நவம்பர்-டிசம்பரில் இந்தியா, பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி நடந்தது. கடைசியாக நடந்த ஒரு நாள் போட்டி- பி்ப்ரவரி 8ம் தேதி இங்கு இந்தியாவும், இலங்கையும் சந்தித்ததாகும். ஆனால் அப்போட்டி கைவிடப்பட்டு விட்டது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:34 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications