Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது தான் என்னோடு உலக கோப்பை டீம்… ஆச்சரியம் கிளப்பிய வார்னேவின் தேர்வு

மெல்போர்ன்: முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவின் உலக கோப்பை கனவு அணியில் கவாஜா இடம்பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மே மாத இறுதியில் இங்கிலாந்தில் தொடங்கும் உலக கோப்பை போட்டிக்கு அனைத்து அணிகளும் கடுமையாக தயாராகி வருகின்றன. உலக கோப்பையில் பங்கேற்கும் அணிகள் தங்கள் அணியை வரும் 23ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்துள்ளது.

நியூசிலாந்து முதல் அணியாக வீரர்கள் பட்டியலை அறிவித்தது.இந்தியா 15ம் தேதி உலககோப்பைக்கான வீரர்கள் பட்டியலை அறிவிக்கிறது. அந்த கெடு முடிய 2 வாரங்கள் உள்ளன.

வார்னே அறிவிப்பு

வார்னே அறிவிப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்னும் ஒரு வாரத்தில் தங்களுடைய உலக கோப்பை அணியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் வார்னே, இங்கிலாந்து உலக கோப்பைக்கான அவரின் ஆஸ்திரேலிய அணியை தேர்வு செய்துள்ளார்.

அணியில் உள்ளவர்கள் விவரம்

அணியில் உள்ளவர்கள் விவரம்

வார்னே தேர்வு செய்துள்ள அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்: டேவிட் வார்னர், ஆர்கி ஷார்ட், ஆரோன் பிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், அலேக்ஸ் கேரி, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா.

கவாஜா இல்லை

கவாஜா இல்லை

ரிசர்வ் வீரர்கள் விவரம்: ஷேன் மார்ஷ், நாதன் லயன், ஆஷ்டோன் டர்னர், கவுல்டர் நைல். இந்த 15 பேர் கொண்ட வார்னே கனவு அணி பட்டியலில் கவாஜா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் ஆட்டம்

முதல் ஆட்டம்

உலக கோப்பைக்காக மேக்ஸ்வெல் ஆரோன் பின்ச் உட்பட பல ஆஸ்திரேலிய வீரர்கள் நடப்பு ஐபிஎல்லில் பங்கேற்கவில்லை. தற்போது விளையாடி கொண்டிருக்கும் அனைத்து வீரர்களும் மே 10ம் தேதிக்குள் பயிற்சி முகாமுக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா முதல் லீக் போட்டியில் ஜூன் 1ம் தேதி ஆப்கானிஸ்தானை பிரிஸ்டாலில் எதிர்கொள்கிறது.

Story first published: Wednesday, April 10, 2019, 16:00 [IST]
Other articles published on Apr 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+